ஜே. எஸ். ராஜ்புத்

'

ஜே. எஸ். ராஜ்புத்
ஏப்ரல் 08, 2015 அன்று புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடந்த ஒரு விழாவில், பேராசிரியர் ஜக்மோகன் சிங் ராஜ்புத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி பத்மசிறீ விருதை வழங்குகிறார்.
பிறப்புஇந்தியா
பணிகல்வியாளர்
எழுத்தாளர்
அறியப்படுவதுகல்விச் சீர்த்திருத்தம்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு
விருதுகள்பத்மசிறீ
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் வழங்கிய ஜான் அமோஸ் கொமேனியஸ் பதக்கம்
மகரிசி வேத வியாசா விருது

ஜே. எஸ். ராஜ்புத் ( J. S. Rajput) ( ஜக்மோகன் சிங் ராஜ்புத் எனவும் அறியப்படுகிறார்) ஓர் இந்தியக் கல்வியாளரும் , எழுத்தாளரும் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு வின் முன்னாள் இயக்குநரும் ஆவார்.[1] போபாலிலுள்ள பிராந்தியக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருந்த பிறகு, 1988 வரை நிறுவனத்தின் முதல்வராக பணியாற்றினார். பின்னர் இவர் இந்தியாவின் கல்வித் துறை அமைச்சகத்தின் கல்வி இணை ஆலோசகராக நியமிக்கப்பட்டு 1994 வரை பணி புரிந்தார்.[2] தேசிய ஆசிரியர் குழுமத்தின் 1994இல் நிறுவப்பட்டபோது, இராஜ்புத் அதன் நிறுவனர் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1999இல் வரை பணியாற்றினார்.[3] 2004ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் தலைவராக இருந்த காலத்தில், இவர் தொலைநிலைக் கல்வி முறையின் மூலம் இளங்கலை கல்வியியல் கல்வியில் விதிமுறைகளைக் கொண்டு வந்து இரண்டு ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்தினார்.[2][2]

இராஜ்புத் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[1][4] ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயற்பியல் மற்றும் கல்வி குறித்த புத்தகங்கள் இந்தியக் கல்வியின் கலைக்களஞ்சியம் (2 தொகுதிகள்)[5] மாறிவரும் உலகில் கல்வி தவறுகள் மற்றும் சக்திகள், கல்வியில் சமகால அக்கறைகள்,[6] தொடக்கக் கல்வியின் உலகமயமாக்கலில் ஆசிரியர் கல்வியின் பங்கு,[7] and Teacher Education in India[8] மற்றும் இந்தியாவில் ஆசிரியர் கல்வி ஆகியவை குறிப்பிடத்தக்கவற்றில் சில.

கௌரவம்

தொகு

இந்தியாவில் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக யுனெஸ்கோ 2004 ஆம் ஆண்டில் ஜான் அமோஸ் கொமேனியஸ் பதக்கம் வழங்கி கௌரவித்தது.[9] மேலும் 2010 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் மகரிஷி வேத வியாஸ் விருதைப் பெற்றார்.[2] இலக்கியம் மற்றும் கல்வியில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[10]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "It's Elementary, Minimum Levels of Learning a Must". Feature. Indian Express. 30 April 2016. Archived from the original on 1 May 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  2. 2.0 2.1 2.2 "Prof. J.S. Rajput on Sanchi University" (PDF). Sanchi University. 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  3. "J. S. Rajput Padma Shri Awarded In 2015". Edubilla. 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  4. J. S Rajput (February 2011). "Public schools practice economic untouchability". Tehelka 8 (5). http://www.tehelka.com/2011/02/public-schools-practice-economic-untouchability/. பார்த்த நாள்: 2024-04-02. 
  5. J. S. Rajput; National Council of Educational Research and Training (India) (2004). Encyclopaedia of Indian Education: L-Z. NCERT. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7450-304-6. இணையக் கணினி நூலக மைய எண் 56598857.
  6. J. S. Rajput (1 January 2009). Contemporary Concerns in Education. Yash Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89537-71-5.
  7. J.S. Rajput (January 1994). Universalisation of Elementary Education: Role of Teacher Education. S.Chand and Company. p. 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0706984651.
  8. J. S. Rajput; K. Walia (1 January 2002). Teacher Education in India. Sterling Publishers Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-2378-8.
  9. "J S Rajput selected for Unesco award". Times of India. 22 July 2004. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 22 November 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._எஸ்._ராஜ்புத்&oldid=4169426" இலிருந்து மீள்விக்கப்பட்டது