நார்மன் இலாக்கியர்

(ஜோசப் நார்மன் இலாக்கியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் ஜோசப் நார்மன் இலாக்கியர் (Sir Joseph Norman Lockyer), (17 மே 1836 - 16 ஆகத்து 1920), எளிமையாக நார்மன் இலாக்கியர் (Norman Lockyer) எனப்படுபவர் ஓர் ஆங்கிலேய அறிவியலாளரும் வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவரும் பிரெஞ்சு அறிவியலாளராகிய பியேர் ஜான்செனும் எல்லியம் (Helium) வளிமத்தைக் கண்டுபிடித்தனர். மேலும் இவர் இயற்கை இதழின் நிஊவ்னரும் முதல் பதிப்பாசிரியரும் ஆவார்.[1][2][3][4][5][6][7][8][9][10]

ஜோசப் நார்மன் இலாக்கியர்
Joseph Norman Lockyer
சர் ஜோசப் நார்மன் இலாக்கியர்.
பிறப்பு(1836-05-17)17 மே 1836
இரக்பி, வார்விக்சுசயர், இங்கிலாந்து
இறப்பு16 ஆகத்து 1920(1920-08-16) (அகவை 84)
சால்கோம்பே பதிவு, தெவோன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல்
பணியிடங்கள்இலண்டன் இம்பீரியல் கல்லூரி
அறியப்படுவதுஎல்லியம் கண்டுபிடிப்பாளர் இயற்கை இதழை நிறுவியவர்
விருதுகள்இரன்ஃபோர்டு பதக்கம் (1874)
ஜான்சென் பதக்கம் (பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம்) (1889)

வாழ்க்கை தொகு

இலாக்கியர் வார்விக்சயரில் உள்ள இரகுபியில் பிறந்தார். இவர் மரபான பள்ளிக் கலவியை முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்துக்கும் பிரான்சுக்கும் பயணம் மேற்கொண்டார். பின்னர் சிலகாலம் பிரித்தானிய போர் அலுவலகத்தில் பொதுப் பணியாளராக வேலை செய்தார்.[11]

இவர் வினிபிரெடு ஜேம்ம்சு எனும் மங்கையை மணந்த பிறகு இங்கிலாந்தில் இலண்டன் நகரத்தில் அமைந்த விம்பிள்டனில் வாழலானார்.[12]

இவர் சூரிய ஆய்வில் அக்கறையுள்ள பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் 1885 இல்இன்று இம்பீரியல் கல்லூரியின் பகுதியாகவுள்ள, தென்கென்சிங்குட்டனில் அமைந்த அரசு அறிவியல் கல்லூரியில் உலகிலேயே முதல் வானியல்சார் இயற்பியலுக்கான பேராசிரியர் ஆனார். இவருக்காக அந்தக் கல்லூரியில் சூரிய இயற்பியல் ஆய்வகம் உருவாக்கப்பட்டது. இங்கே இவர் 1813 ஆம் ஆண்டு வரை ஆராய்ச்சி வழிகாட்டியாக விளங்கினார்.

இவர் 1860 களில் வான்பொருள்களின் உட்கூறுகளைத் தீர்மானிக்கவல்ல பகுப்பாய்வுக் கருவியான மின்காந்த கதிர்நிரல் பதிப்பியில் ஆர்வம் கொண்டார். இவ்ர் மேற்கு ஆம்சுடெடில் அமைந்த தன் புதிய வீட்டில், முன்னர் விம்பிள்டனில் பயன்படுத்திய, அதே 6¼ அங்குலத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார்.[1]

இவர் 1868 இல் சூரிய விளிம்புக்கு அருகில் எடுத்த கதிர்நிரல்வரையில் ஒரு த்லக்கமான மஞ்சள் கோட்டை கண்ணுற்றார். இது 588 நுமீ அலைநீளமுள்ள, சோடியத் தனிமத்தின் டி வகைக் கதிர்களை விட சற்றே குறைந்த அலைநீளத்தோடு அமைந்திருந்தது. இந்தக் கோட்டை அப்போதுள்ள எத்தனிமத்துடனும் பொருத்தி விளக்க முடியவில்லை. எனவே இவர் இலண்டன் நோக்கீட்டில் புலப்பட்ட இந்த மஞ்சட்கோடு சூரியனில் உள்ள புதிய தனிமத்தைக் குறிப்பதாகக் கூறினார். அதற்கு எல்லியம்(Helium) எனவும் பெயரிட்டார். இப்பெயர் சூரியன் என பொருள்படும் 'Helios' எனும் கிரேக்கச் சொல்லை ஒட்டிப் பெயரிடப்பட்டது.ஜான்சென் என்பவரும் 1868, ஆகத்து 18 இல் ஏற்பட்ட சூரிய ஒளிமறைப்பு நோக்கீட்டிலும் இந்த மஞ்சட்கோட்டை கண்ணுற்றிருந்தார். இவர்கள் இருவரது ஆய்வுரைகளும் பிரெஞ்சுக் கல்விக்கழகத்துக்கு ஒரே நாளில் வந்தமையால், ஜான்செனும் இலாக்கியரும் எல்லையக் கண்டுபிடிப்புக்கு கூட்டுத் தகைமையைப் பெற்றனர். புவியக எல்லியம் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இசுகாட்டிய வேதியியலாளரான வில்லியம் இராம்சேவால் கண்டறியப்பட்டது. எல்லியத்தை இன்ங்காண்பதில் இலாக்கியர் பெயர்பெற்ற அன்றைய வேதியியலாளரான எடுவார்டு பிராங்லாந்துடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.[13]

இவர் 1869 இல் இயற்கை எனும் பொது அறியலை அறிமுகப்படுத்தும் இதழை பல அறிவியல் புலங்களுக்கு இடையே எண்ணக்கருக்களைப் பரிமாறிக்கொள்ள நிறுவினார்.[14] இவர் தன் இறப்பு நேர்வதற்கு சற்று முன்புவரை இதன் ஆசிரியராக இருந்துள்ளார். இவர் எட்டுமுறை சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களை மேற்கொண்டார் இவற்றில் சிசிலி 1879 திசம்பர் 22 சூரிய ஒளிமறைப்பு, இந்தியா 1871 சூரிய ஒளிமறைப்பு இந்தியா 1898 ஜனவரி 22 சூரிய ஒளிமறைப்பு ஆகியன அடங்கும்.[1]

இவர் 1903 இல் வாக்குரிமைப் போராளியான மேரி தாமசினா புரோதுர்சுட்டுவை இரண்டாவதாக மணந்தார்.[15] 1913 இல் ஓய்வு பெற்றதும், இவர் தெவோன், சிடுமவுத் நகரருகே அமைந்த சால்கோமிரேகிசுவில் உள்ள தனது வீட்டருகில் ஒரு வான்காணகத்தை நிறுவினார். இது முதலில் இது கில் வான்காணகம் எனவும் இவர் இறந்த பிறகு இது நான்ம்ன் இலக்கியர் வான்காணகம் எனவும் அழைக்கப்பட்டது.. ஒரு கால அளவில், இது எக்சீட்டர் பல்கலைக்கழக்த்தின் பகுதியாக இருந்துள்ளது. ஆனால் இது கிழக்கு தெவோன் மாவட்ட இலாக்கியர் வான்காணகக் கழகத்தின் உரிமையில் இப்போது உள்ளது. எக்சீட்டர் பல்கலைக்கழகத்தின் நார்மன் இலாக்கியர் வானியற்பியால் கட்டிலில் அண்மையில்,விண்மீன் உருவாக்கத்தையும் புறவெளிக் கோள்களையும் ஆயும் வானியற்பியல் குழுவின் உறுப்பினரான திம் நாயிலர் அணிசெய்கிறார்.

 
ஆங்கில மரபு நினைவுப் பட்டயம், பெனிவெர்ன் சாலை, இயர்ள்சு வளாகம்,இலண்டன்.
 
1873 ஆம் ஆண்டு இலாக்கியர் ஓவியம்

இவர் 1920 இல் சால்கோம் இரெகிசில் உள்ள தன் வீட்டில் இறந்தார். அங்கேயே இவர் புனித பீட்டர், புனித மேரி ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[16][17]இவர் 1920 இல் சால்கோம் இரெகிசில் உள்ள தன் வீட்டில் இறந்தார். அங்கேயே இவர் புனித பீட்டர், புனித மேரி ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[18][19]

வெளியீடுகள் தொகு

தகைமைகளும் விருதுகளும் தொகு

 • அரசு கழக ஆய்வுறுப்பினர் (1869)
 • ஜான்சென் பதக்கம், பாரீசு அறிவியல் கல்விக்கழகம் (1875)
 • பாத் ஆணையின் கட்டளை மாவீர்ர் பட்டம் (1897)[7]
 • தலைவர், பிரித்தானியக் கழகம் (1903 – 1904)
 • இலாக்கியர் நிலாக் குழிப்பள்ளமும் இலாக்கியர் செவ்வாய்க் குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 Aloysius Cortie (1921). "Sir Norman Lockyer, 1836–1920". Astrophysical Journal 53 (4): 233–248. doi:10.1086/142602. Bibcode: 1921ApJ....53..233C. http://articles.adsabs.harvard.edu/full/1921ApJ....53..233C. 
 2. Arthur Eddington (1921). "Sir Joseph Norman Lockyer". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 81 (4): 261–266. doi:10.1093/mnras/81.4.261a. Bibcode: 1921MNRAS..81R.261.. http://articles.adsabs.harvard.edu/full/1921MNRAS..81R.261.. பார்த்த நாள்: 4 November 2015. 
 3. Rolston, W. E. (1920). "Sir Norman Lockyer (1836–1920)". The Observatory 43: 358–362. Bibcode: 1920Obs....43..358R. http://articles.adsabs.harvard.edu/full/1920Obs....43..358R. பார்த்த நாள்: 4 November 2015. 
 4. William Wallace Campbell (1920). "Sir Joseph Norman Lockyer–(1836-1920)". Publications of the Astronomical Society of the Pacific 3: 265–268. doi:10.1086/122984. Bibcode: 1920PASP...32..265C. http://articles.adsabs.harvard.edu/full/1920PASP...32..265C. பார்த்த நாள்: 4 November 2015. 
 5. Satterly, John (1921). "Sir J. Norman Lockyer, K.C.B., F.R.S.". Journal of the Royal Astronomical Society of Canada 15 (2): 45–56. Bibcode: 1921JRASC..15...45S. http://articles.adsabs.harvard.edu/full/1921JRASC..15...45S. பார்த்த நாள்: 4 November 2015. 
 6. Alfred Fowler (1923). "Sir Norman Lockyer, K.C.B., 1836–1920". Proceedings of the Royal Society of London A 104 (728): i–xiv. doi:10.1098/rspa.1923.0126. Bibcode: 1923RSPSA.104D...1.. http://rspa.royalsocietypublishing.org/content/104/728/i. பார்த்த நாள்: 4 November 2015. 
 7. 7.0 7.1 Meadows, Arthur Jack (1972). Science and Controversy: a Biography of Sir Norman Lockyer. Cambridge, Massachusetts: MIT Press. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-230-22020-7. Bibcode: 1972scbs.book.....M. https://archive.org/details/Scienceand_00_Mead. 
 8. Wilkins, George A. (1994). "Sir Norman Lockyer's Contributions to Science". Quarterly Journal of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 35 (1): 51–57. Bibcode: 1994QJRAS..35...51W. http://articles.adsabs.harvard.edu/full/1994QJRAS..35...51W. பார்த்த நாள்: 4 November 2015. 
 9. Frost, Michael (2007). "Lockyer, Joseph Norman". in Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R.. The Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://link.springer.com/referenceworkentry/10.1007/978-1-4419-9917-7_859. பார்த்த நாள்: 4 November 2015. 
 10. Meadows, Arthur Jack (2004). "Lockyer, Sir Joseph Norman". Oxford Dictionary of National Biography. Oxford, England: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். doi:10.1093/ref:odnb/34581. http://www.oxforddnb.com/view/article/34581. பார்த்த நாள்: 4 November 2015. 
 11. Frost, Michael A. (2005). "J. Norman Lockyer: The Early Years". The Antiquarian Astronomer (Society for the History of Astronomy) 2: 21–26. Bibcode: 2005AntAs...2...21F. http://articles.adsabs.harvard.edu/full/2005AntAs...2...21F. பார்த்த நாள்: 4 November 2015. 
 12. Wilkins, George A. (2006). "The Lockyer Ladies". The Antiquarian Astronomer (Society for the History of Astronomy) 3: 101–106. Bibcode: 2006AntAs...3..101W. http://articles.adsabs.harvard.edu/full/2006AntAs...3..101W. பார்த்த நாள்: 4 November 2015. 
 13. Hearnshaw, J. B. (1986). The Analysis of Starlight. Cambridge: Cambridge University Press. பக். 84–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-25548-1. Bibcode: 1986asoh.book.....H. 
 14. Sir Norman Lockyer, தொகுப்பாசிரியர் (1880). Nature, Volume 21. Macmillan Journals Limited. பக். 99. https://books.google.com/books?id=eSQ6AQAAMAAJ&pg=PA99&dq=ines+mongolian+spot&hl=en&sa=X&ei=3pqdVaHIBIWS-wGP46H4BA&ved=0CFMQ6AEwCQ#v=onepage&q=ines%20mongolian%20spot&f=false. பார்த்த நாள்: May 17, 2014. 
 15. "Obituary Notices : Fellows:- Lockyer, Mary Thomasina". Monthly Notices of the Royal Astronomical Society, Vol 104: 91. 1944. http://adsabs.harvard.edu/full/1944MNRAS.104R..91.. பார்த்த நாள்: 13 January 2017. 
 16. Jacobson, Walter. "Around the Churches of East Devon". Archived from the original on 2008-02-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-30.
 17. Edwards, D. L. (1937). "Report of the Proceedings of the Sidmouth, Norman Lockyer Observatory". Monthly Notices of the Royal Astronomical Society 97: 309–310. doi:10.1093/mnras/97.4.291. Bibcode: 1937MNRAS..97..309.. http://articles.adsabs.harvard.edu/full/seri/MNRAS/0097//0000309.000.html. பார்த்த நாள்: 2008-01-30. 
 18. Jacobson, Walter. "Around the Churches of East Devon". Archived from the original on 2008-02-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-30.
 19. Edwards, D. L. (1937). "Report of the Proceedings of the Sidmouth, Norman Lockyer Observatory". Monthly Notices of the Royal Astronomical Society 97: 309–310. doi:10.1093/mnras/97.4.291. Bibcode: 1937MNRAS..97..309.. http://articles.adsabs.harvard.edu/full/seri/MNRAS/0097//0000309.000.html. பார்த்த நாள்: 2008-01-30. 

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மன்_இலாக்கியர்&oldid=3624516" இலிருந்து மீள்விக்கப்பட்டது