ஜோசப் பிகன்

ஜோசப் " பெப்பி " பிகன் (Josef "Pepi" Bican 25 செப்டம்பர் 1913 - 12 டிசம்பர் 2001) ஓர் ஆஸ்திரிய - செக் தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் முன்கள வீரராக விளையாடினார். [1] [2]

ஜோசப் பிகன்
ஜோசப் பிகன் 1940இல்
சுய விவரம்
முழுப்பெயர்ஜோசப் பிகன்
பிறந்த தேதிசெப்டம்பர் 25, 1913(1913-09-25)
பிறந்த இடம்வியன்னா, ஆத்திரியா-அங்கேரி
மறைந்த தேதி12 திசம்பர் 2001(2001-12-12) (அகவை 88)
மறைந்த இடம்பிராகா, செக் குடியரசு
ஆடும் நிலைமுன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)
இளநிலை வாழ்வழி
1923–1928எர்தா வியன்னா II
1928–1929Schustek
1929–1931Farbenlutz
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
1931–1935ரேபிட் வியன்னா62(95)
1935–1937அட்மிரா45(69)
1937–1948சிலாவியா பிராக்221(447)
1949–1951எஃப் சி விட்கோவைஸ்158(167)
1953–1955டைனமோ பிராக்134(134)
Total850(1068)
தேசிய அணி
1933–1936ஆஸ்திரியா19(14)
1938–1949செகோஸ்லாவாக்கியா 14(12)
1939–1951செக் 1(3)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன..
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது. † தோற்றங்கள் (கோல்கள்).

பிகன் தனது கால்பந்து தொழில் வாழ்க்கையை ரேபிட் வியன்னாவில் 1931 இல் தொடங்கினார். பிகன் ஆஸ்திரியாவில் இருந்த காலத்தில் நான்கு லீக் பட்டங்களை வென்றார், [3] பின்னர் 1937 இல் சிலாவியா பிரகாவுக்குச் சென்றார், அங்கு இவர் 1948 வரை தங்கியிருந்தார், மேலும் அந்தச் சங்கத்திற்காக விளையாடிவர்களில் அதிக இலக்குகள் அடித்தவர் எனும் சாதனையையும் படைத்தார். [4]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

பிகன் வியன்னாவில் ஃபிரான்டிசெக் மற்றும் லுட்மிலா பிகானுக்கு மகனாகப் பிறந்தார். இவர் மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார். [5] இவரது தாய், ஃபிரான்டிசெக் தெற்கு போஹேமியாவில் உள்ள செட்லிஸைச் சேர்ந்தவர்.ஜோசப்பின் தந்தை ஃபிரான்டிசெக் ஹெர்தா வியன்னாவுக்காக விளையாடிய ஒரு கால்பந்து வீரர் ஆவார். இவர் முதலாம் உலகப் போரில் கலந்துகொண்டவர் ஆவார். இருப்பினும், ஃபிரான்டிசெக் 1921 ஆம் ஆண்டில் தனது 30 ஆம் வயதில் வயதில் இறக்க நேரிட்டது, ஏனெனில் ஒரு கால்பந்து போட்டியில் சிறுநீரகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிக்க இவர் மறுத்துவிட்டார்.

சர்வதேச கால்பந்து வாழ்க்கைதொகு

நவம்பர் 29, 1933 இல், (20 வயது மற்றும் 64 நாட்கள்) பிகன் ஆஸ்திரிய தேசிய அணியில் இடம் பெற்றார். இசுக்காட்லாந்திற்கு எதிரான அந்தப் போட்டியில் 2-2 என்ற இலக்குகள் கணக்கில் ஆஸ்திரிய அணி வெற்றி பெற்றது. பின்னர் இவர் 1934 உலகக் கோப்பையில், ஆஸ்திரியாவின் வுண்டர்டீம் அரையிறுதி வாய்ப்பினைப் பெற்ற போது அந்த அணிக்காக விளையாடினார். கூடுதல் நேரத்தில் இவர் இலக்குகள் அடித்ததன் மூலம் பிரான்சுக்கு எதிரான போட்டியில் 3–2 வெற்றியில் என வெற்றி பெற்றது.

சர்வதேச இலக்குகள்தொகு

ஆஸ்திரியா
ஆண்டு பயன்பாடுகள் இலக்குகள்
1933 2 1
1934 6 5
1935 5 3
1936 6 5
மொத்தம் 19 14
செக்கோஸ்லோவாக்கியா
ஆண்டு பயன்பாடுகள் இலக்குகள்
1938 6 8
1947 4 4
1948 2 0
1949 2 0
மொத்தம் 14 12
மொத்தம்
ஆண்டு பயன்பாடுகள் இலக்குகள்
மொத்தம் 34 29

மேற்கோள்கள்தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_பிகன்&oldid=3120433" இருந்து மீள்விக்கப்பட்டது