ஜோதி சிங் (Jyoti Singh)(பிறப்பு 1 அக்டோபர் 1966) என்பவர் ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.[1]

ஜோதி சிங்
நீதிபதி-தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 அக்டோபர் 2018
பரிந்துரைப்புதீபக் மிசுரா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1966 (1966-10-01) (அகவை 58)
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

சிங் தில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இதன் பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெறும் முன்னர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். இவர் 2011-இல் மூத்த வழக்கறிஞரானார். சிங் இந்தியா அரசு சார்பில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.தில்லி உயர்நீதிமன்றச் சட்ட சேவைகள் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். 22 அக்டோபர் 2018 அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. ""This profession does not come to you on a platter"- Justice Jyoti Singh". TheLeaflet (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  2. "CJ And Sitting Judges". delhihighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_சிங்&oldid=3894803" இலிருந்து மீள்விக்கப்பட்டது