ஜோதி (இதழ்)

பர்மாவின், ரங்கூனில் 1934ஆம் ஆண்டு தொடங்கி 1942 வரை வெளிவந்த இதழ்

ஜோதி என்பது ஒரு தமிழ் இதழாகும். இது பர்மாவின் தலைநகரான ரங்கூனில் இருந்து வெளிவந்தது. இந்த இதழானது 1934ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தொடங்கி 1942 பெப்ரவரி மாதம்வரை வெளிவந்தது. இந்த இதழின் நிர்வாக ஆசிரியராக வெ. சாமிநாத சர்மா இருந்தார். இந்த இதழானது இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாவை சப்பான் கைப்பற்றியதையடுத்து செய்பட இயலாமல் இந்த இதழ் நின்றுபோனது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. விதியின் வழியில் (2006 செப்டம்பர் 19). எனது பர்மா வழி நடைப் பயணம். சென்னை: மகாகவி பதிப்பகம். பக். 22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_(இதழ்)&oldid=2662285" இலிருந்து மீள்விக்கப்பட்டது