எனது பர்மா வழி நடைப் பயணம்

வெ. சாமிநாத சர்மா எழுதிய ஒரு நூல்

எனது பர்மா வழி நடைப் பயணம் என்பது வெ. சாமிநாத சர்மா எழுதிய ஒரு நூலாகும்.[2] இது பயண இலக்கியம், தன் வரலாறு, சமகால வரலாறு என்று குறிக்கத்தக்க ஒரு நூல். இது இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாவை சப்பான் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்துவந்த வெ. சாமிநாத சர்மா அகதியாக பல இன்னல்களுக்கு ஆளாகி கால்நடையாகவும், வாகனங்கள் வழியாகவும் சென்னை வந்துசேர்ந்தார். அவர் இந்த நூலில் பர்மாவின் ரங்கூனில் இருந்தது புறப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது முதல் அதன்பிறகு 1942 பெப்ரவரியில் பயணத்தைத் தொடங்கி பலவகையில் பயணம்செய்து 1942 மே 14 அன்று சென்னை வந்து சேர்ந்ததுவரையிலான நிகழ்வுகளைப் பற்றி இதில் எழுதியுள்ளார்.

எனது பர்மா வழி நடைப் பயணம்
நூல் பெயர்:எனது பர்மா வழி நடைப் பயணம்
ஆசிரியர்(கள்):வெ. சாமிநாத சர்மா
வகை:பயண இலக்கியம்
துறை:தன் வரலாறு
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:184
பதிப்பகர்:மகாகவி பதிப்பகம் சென்னை
பதிப்பு:2006
ஆக்க அனுமதி:நாட்டுடமை[1]

வரலாறு

தொகு

வெ. சாமிநாதசர்மா தன் பயண அனுபவங்களை எழுதிவைத்த நாட்குறிப்புகளின் அடிப்படையில் இப்பயண நூலை எழுதியுள்ளார். தன் இறுதி காலத்தில் இந்த நூலை வெளியிட இவர் ஆர்வத்துடன் இருந்துள்ளார். கையெழுத்துப் பிரதியில் இருந்த இந்த நூலை அமுதசுரபி இதழில் தொடராக வெளியிட அதன் ஆசிரியர் விக்ரமன் முடிவு செய்தார். 1978 ஆம் ஆண்டு இதழில் முதல் அத்தியாயம் வெளிவந்தது. ஆனால் அந்த இதழை சாமிநாத சர்மாவுக்கு காட்டும் முன்பே அவர் இறந்துவிட்டார். அதன்பிறகு அமுதசுரபி இதழில் இரண்டு ஆண்டுகள் இது தொடராக வெளிவந்தது. பின்னர் நூலாக வெளிவந்தது.

அத்தியாயங்கள்

தொகு

இந்த நூலானது 1. ஜப்பானியர் தந்த கிருஸ்துமஸ் பரிசு, 2. அடுத்தடுத்து விமானத் தாக்குதல், 3.விதியின் வழியில்..., 4. நன்றிக்குரிய நண்பர்கள், 5. பரிவுகாட்டிய உறவினர்கள், 6. புறப்பாடு, 7. புரோம் நகரத்தில், 8. பர்மிய உழவர்களின் உதவி, 9. உண்டி கொடுத்து உயிர் கொடுத்தவர், 10. மாந்தளை சேர்தல், 11. மாந்தளை வாசம், 12. ரங்கூன் நிலைமை, 13. இந்தியர்கள் அவதி, 14. விமானத்திலும் கால்நடையாகவும், 15. அதிகாரிகள் அளித்த ஆறுதல், 16. அமைதி தந்த நூல்கள், 17. நடுவில் வந்த யோசனை, 18. காலத்தில் கிடைத்த உதவி, 19. நகர்ந்து சென்ற ரெயில்..., 20. மொனீவாவில்..., 21. நீராவிப் படகுகள், 22. கலேவாவுக்கு..., 23. கூலியாட்களின் உபசரணை, 24. 'ஹிட்லர்' மூலம் அறிமுகம், 25. டாமுக்குத் திறந்த லாரியில்..., 26. தபால் நிலையத்தில் வாசகம், 27. டாமு முகாம் அளித்த காட்சி, 28. கறுப்பு - வெளுப்பு வழிகள், 29. காட்டுத்தீ அனுபவம், 30. நாகர்களும் மணிப்பூரிகளும், 31. டோலிகள் கிடைத்தன, 32. கடைசி யாத்திரைக்கு ஒத்திகையா, 33. ஒன்று படுத்திய இராம காதை, 34. ஏணையில் அமர்ந்து வருகை, 35. ஒரு சட்டைக்குள் இருவர், 36. இயற்கைக் காட்சிகள், 37. வறுத்த கேழ்வரகு கொடுத்த வேதனை 38. மணிப்பூரிகளின் கலையுணர்ச்சி, 39. அன்பின் பிணைப்பு, 40. மேலதிகாரிகளின் மேலோட்டமான பண்பு, 41. இம்பால் முகாமில், 42. இலவச சவாரி, 43. லாரியில் நாற்காலி தண்டனை, 44. தாய்நாட்டு மண்ணிலே, 45. டிமாபூர் முகாமில், 46. கல்கத்தா நோக்கி, 47. கடைசியில் சென்னைக்கு... போன்ற அதிகாரங்களைக் கொண்டுக்கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "வெ. சாமிநாத சர்மா எழுதிய நூல்கள்". wikiwand.com/. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "எனது பர்மா வழி நடைப் பயணம்". Online Public Access. connemara.tnopac. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]