ஜோன்ஹா அருவி

ஜோன்ஹா அருவி(Jonha Falls), இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அருவியாகும்.

ஜோன்ஹா அருவி
ஜோன்ஹா அருவி is located in சார்க்கண்டு
ஜோன்ஹா அருவி
ஜோன்ஹா அருவி
Map
அமைவிடம்ராஞ்சி மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா
ஆள்கூறு23°20′30″N 85°36′30″E / 23.34167°N 85.60833°E / 23.34167; 85.60833
மொத்த உயரம்43 மீட்டர்கள் (141 அடி)

அருவி தொகு

ராஞ்சி பீடபூமியின் விளிம்பில் அமைந்துள்ள ஜோன்ஹா அருவி, தொங்கும் பள்ளத்தாக்கு அருவிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். குன்கா ஆறு இதன் ஆதிமூலம் ஆகும், ரரு ஆறு இந்த அருவியை அமைக்கிறது.[1] அருவியின் சுற்றுப்புறத்தை ரசிக்க ஒருவர் 722 படிகளில் இறங்க வேண்டும்.[2] அருவியின் நீர் 43 மீட்டர் (141 அடி) உயரத்தில் இருந்து விழுகிறது.[3]

ஆற்றின் புத்துணர்வான வேக ஓட்டத்தினால் ஏற்படும் சரிவான இடைவெளிக்கு(Knick Point), ஜோன்ஹா அருவி ஒரு சிறந்த உதாரணமாகும். ஆற்றின் கொந்தளிப்பான புத்துணர்வான ஓட்டத்தினால் மண்ணரிப்பு ஏற்பட்டு, ஆற்றின் நீண்ட நெடிய சமதள ஓட்டத்தில் சரிவான இடைவெளி (Knick Point) ஏற்படுகிறது. இந்த சரிவான இடைவெளி நீரை செங்குத்தாக விழ வைக்கிறது, இதனால் அருவி உருவாகிறது.[4]

கலாச்சாரம் தொகு

கௌதம புத்தரை வழிபடும் வகையில் புத்த ஆலயத்தை உள்ளடக்கிய ஒரு சுற்றுலா ஓய்வு இல்லம் இங்கு உள்ளது.[2] ராஜா பல்தேவ் தாசு பிர்லா அவர்களுடைய மகன்களால் புத்தருக்காக இந்த கோயில் மற்றும் ஆசிரமம் கட்டப்பட்டது .[5] ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் ஜோன்ஹாவில் இதை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[2]

போக்குவரத்து தொகு

இது ராஞ்சியில் இருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ளது. சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்து இரண்டின் மூலமாகவும் இங்கு செல்லலாம்.[6] ஜோன்ஹா நிலையம் அருவியிலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒருவர் சாலை மார்க்கமாக செல்ல, ராஞ்சி-புருலியா சாலையில் 32 கிலோமீட்டர் (20 மைல்) பயணித்து பிறகு பிரதான சாலையில் இருந்து சுமார் 4.8 கிலோமீட்டர் (3 மைல்) பயணம் செய்ய வேண்டும்.[7]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bharatdwaj, K (2006). Physical Geography: Hydrosphere By K. Bharatdwaj. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183561679. https://books.google.com/books?id=T1Y_Ytx9wp4C&q=Ranchi+plateau&pg=PA161. பார்த்த நாள்: 2010-05-02. 
  2. 2.0 2.1 2.2 "Jonha Falls". must see India. Archived from the original on 2010-05-02. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  3. "High and dry- Dasam drained, Hundru a trickle". The Telegraph 29 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  4. A.Z.Bukhari (2005). Encyclopedia of nature of geography. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126124435. https://books.google.com/books?id=Iz_m9dlXEUYC&q=Odda+Falls&pg=PA110. பார்த்த நாள்: 2010-07-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Waterfall Around Ranchi". exoticindia. Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  6. "Johna Falls". Ranchi district administration. Archived from the original on 2010-01-24. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  7. Sir John Houlton, Bihar, the Heart of India, p. 144, Orient Longmans, 1949
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்ஹா_அருவி&oldid=3777109" இலிருந்து மீள்விக்கப்பட்டது