ஜோவாவோ மாக்யூயோ
ஜோவாவோ மாக்யூயோ(João Magueijo) (பிறப்பு 1967) ஒரு போர்த்துகீசிய அண்டவியலாளரும் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியரும் ஆவார். ஒளியின் வேறுபடும் வேகத்தின் (VSL) முன்னோடியாக அவர் திகழ்கிறார்.
João Magueijo at the journée de la Science at the EPFL, 11 November 2005 | |
பிறப்பு | 1967 Évora, Portugal |
---|---|
குடியுரிமை | Portuguese |
Alma mater | University of Lisbon Cambridge University |
துறை ஆலோசகர் | Anne-Christine Davis |
கல்வியும் தொழிலும்
தொகுஜோவாவோ மாக்யூயோ இலிசுபன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்றார். கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்சு கல்லூரியில் அவருக்கு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டது. பிரின்சுடன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஆசிரிய உறுப்பினராக இருந்த அவர் , தற்போது இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார் , அங்கு இவர் பொது சார்பியல், பட்ட, மேற்பட்ட மாணவருக்குப் பொது சார்பியலைக் கற்பிக்கிறார்.
1998 ஆம் ஆண்டில் மாக்யூயோ ஆந்திரியாசு ஆல்பிரெக்ட்டுடன் இணைந்து ஒளியின் வேறுபடும் வேகத்தை ஆய்வு செய்தார் (VSL) இது தொடக்க கால அண்ட ஒளியின் வேகம் 3 1030 கிமீ / நொடி வரை இருந்தது என்று முன்மொழிகிறது. இது அடிவானச் சிக்கலை விளக்குவதோடு (விரிவடைந்து வரும் அண்டத்தின் நெடுந்தொலைவுப் பகுதிகளின் பண்புகளை ஒன்றிணைக்கவும் ஒருமைப்படுத்தவும் நேரம் இருந்திருக்கும் என்பதால்) மேலும் அண்ட உப்புதலின் முதன்மைக் கோட்பாட்டிற்கு மாற்றாகவும் அமைகிறது.
2003 ஆம் ஆண்டு வெளியான ஒளிவேகத்தினும் விரைவாக: அறிவியல் முன்கணிப்பு என்ற புத்தகத்தில் , வி. எஸ். எல். ஐத் தொடர்ந்து தனது தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றி மாக்யுயோ விவாதிக்கிறார். வி. எஸ். எல். முன்னுரிமை குறித்து ஜான் மொபாட்டுடன் ஏற்பட்ட தவறான புரிதலுடன் அவர் தொடர்புடையவர். மொபாட்டு 2008 மே 13 அன்று திரையிடப்பட்ட சயின்ஸ் சேனல் சிறப்பு ஜோவாவோ மாக்யூயோவின் பெருவெடிப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார்.[1]
2009 ஆம் ஆண்டில் இவர் மறைந்த இயற்பியலாளர் எட்டோர் மயோரானாவின் வாழ்க்கையும் அறிவியலும் பற்றிய ஒரு பிரில்லியன்ட் டார்க்ன சு எனும் நூலை வெளியிட்டார்.
2014 ஆம் ஆண்டில் இவர் ஐக்கிய இராச்சியம் குறித்த தனது அவதானிப்புகளை விவரிக்கும் பைஃப்ஸ் மால் பஸ்ஸாடோசு எனும் நூலை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் மாக்யூயோ பிரித்தானியப் பண்பாட்டை" உலகின் மிகவும் அழுகிய சமூகங்களில் ஒன்று " என்று விவரித்தார் , மேலும் " நீங்கள் ஆங்கில வீடுகளுக்குச் செல்லும்போது அல்லது பள்ளிகளில் அல்லது மாணவர் தங்குமிடங்களில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் மிகவும் அருவருப்பானவை , என் பாட்டியின் கோழி கூண்டு கூட தூய்மையாக இருக்கிறது.[2] அதில் பிரித்தானியமக்கள் " கட்டுப்பாடற்ற காட்டு விலங்குகள் " என்று விவரிக்கப்பட்டனர். இந்த புத்தகம் போர்ச்சுகலில் மட்டுமே வெளியிடப்பட்டது. அங்கு அது 20,000 படிகள் விற்றது.[3]
புழுத்துளை ஊடாக நிகழ்வின் இரண்டாம் கட்டத்தில் மார்கன் பிரீமேன் ஜோவாவோ மாக்யூயோவை நேர்காணல் செய்துள்ளார்.
மேலும் காண்க
தொகு- இரட்டை சிறப்பு சார்பியல்
புத்தகங்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- Albrecht, Andreas; Magueijo, João (1999). "Time varying speed of light as a solution to cosmological puzzles". Physical Review D 59 (4): 043516. doi:10.1103/PhysRevD.59.043516. Bibcode: 1999PhRvD..59d3516A.
- Magueijo, João; Smolin, Lee (2002). "Lorentz Invariance with an Invariant Energy Scale". Physical Review Letters 88 (19): 190403. doi:10.1103/PhysRevLett.88.190403. பப்மெட்:12005620. Bibcode: 2002PhRvL..88s0403M.
- Magueijo, João (2003). "New varying speed of light theories". Reports on Progress in Physics 66 (11): 2025–2068. doi:10.1088/0034-4885/66/11/R04. Bibcode: 2003RPPh...66.2025M.)
- ↑ "João Magueijo's Big Bang". Archived from the original on May 13, 2008.
- ↑ Walton, Gregory (15 September 2014). "Top Portuguese academic decries 'filthy' English". The Telegraph. https://www.telegraph.co.uk/education/universityeducation/11095057/Top-Portuguese-academic-decries-filthy-English.html?fb.
- ↑ Bland, Archie (20 September 2014). "Who said Britons were drunk, dirty and deplorable?". https://www.theguardian.com/uk-news/2014/sep/20/who-said-britons-were-drunk-dirty-and-deplorable-joao-magueijo-portuguese-writer.