ஞானப்பிரகாச மாலை
ஞானப்பிரகாச மாலை என்பது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தர் இயற்றிய நூல். குருஞான சம்பந்தரின் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசர். இது ஆசிரியரைப் போற்றி மாணாக்கர் எழுதிய நூல். இந்த நூலுக்குப் பண்டாரக் கலித்துறை என்னும் பெயரும் உண்டு. [1]
இது 46 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்ட நூல். இது நூலாசிரியர் தம் குருவாசிரியரைப் போற்றி அவ்வப்போது கானப்பட்ட பாடல்களின் தொகுப்பு.
- பாடல்
- எடுத்துக்காட்டு [2]
ஆரார் பகைக்கினும் ஆரார் நகைக்கினும் ஆவதென்ன
சீரார் கமலையுள் ஞானப்ரகாசன் என் சிந்தையுள்ளே
பேரா(து) இருந்து சிவானுபவம் [3] தரப் பெற்றுளனால்
வாராது சென்மமும் [4] போகாது பேரின்ப வாரியுமே.[5]
கருவிநூல்
தொகுமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005