ஞானேசுவர் பட்டீல்

இந்திய அரசியல்வாதி

ஞானேசுவர் பட்டீல் (Gyaneswar Patil) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் காண்டவா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நந்தகுமார் சிங் சவுகான் இறந்த பிறகு, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக கண்டவா மக்களவைத் தொகுதிக்கு 2021-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 17ஆவது மக்களவை உறுப்பினர் ஆனார். இத்தேர்தலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ராஜ் நாராயண் சிங் பூர்னியை 82,140 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[1][2][3][4] மீண்டும் பாட்டீல், 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார்.

ஞானேசுவர் பட்டீல்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2024
தொகுதிகண்டவா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2 நவம்பர் 2021 – மே 2024
முன்னையவர்நந்த குமார் சவுகான்
தொகுதிகண்டவா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)காண்டுவா, மத்தியப் பிரதேசம்
கல்விஇளம் வணிகவியல்
முன்னாள் கல்லூரிஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தொழில்விவசாயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Gyaneshwar Patil (Criminal & Asset Declaration)". My Neta. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
  2. "BJP snatches Jobat (ST) Assembly seat from Congress". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
  3. "BJP takes lead in Khandwa Lok Sabha and three Assembly seats". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
  4. "Gyaneshwar Patil (BJP) declared elected from Khandwa parliamentary constituency in Madhya Pradesh". Free Press Journal. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானேசுவர்_பட்டீல்&oldid=4032686" இலிருந்து மீள்விக்கப்பட்டது