டங்கன் கில்லிஸ்
டங்கன் கில்லிஸ் (Duncan Gillis) (ஜனவரி 3, 1883 – மே 2, 1963) 1912 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்ட கனடிய தடகள வீரர் ஆவார்.[1] ஒலிம்பிக் தொடக்க விழாக்களில் கனடாவின் கொடி ஏந்தியவராக முதன்முதலில் கில்லிஸ் பணியாற்றினார்.[2]
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
டங்கன் கில்லிஸ் | ||
ஆடவர் தடகளப்போட்டிகள் | ||
1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் | ஆடவர் சம்மட்டி எறிதல் |
ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுகில்லிஸ் நோவா ஸ்கோடியாவின் கேப் பிரெட்டனில் பிறந்தார். பிரித்தானிய கொலம்பியாவின் வடக்கு வான்கூவரில் இறந்தார்.[3]
இவர் 1912 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் சம்மட்டி எறிதலில் கனடாவுக்காகப் போட்டியிட்டார். அங்கு இவர் 48.39 மீட்டர்கள் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வட்டு எறிதல் போட்டியிலும் பங்கேற்று 14வது இடம் பிடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Duncan Gillis". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 2 May 2021.
- ↑ Canadian Olympic flag-bearers பரணிடப்பட்டது 2020-05-24 at the வந்தவழி இயந்திரம், The Globe and Mail. 2008-07-23. Retrieved 2008-07-23.
- ↑ "Duncan Gillis". Archived from the original on 2020-04-17. பார்க்கப்பட்ட நாள் 2019-05-16.