டசீன் ஃபாத்மா
டசீன் ஃபத்மா உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி.[1] அவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் மற்றும் ராம்பூர் மாவட்டத்தின் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.[2] அவர் முகமது அலி ஜ ஹர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.
டாக்டர்.டசீன் ஃபாத்மா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 அக்டோபர் 2019 | |
முன்னையவர் | அசாம் கான் |
தொகுதி | ராம்பூர் |
நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா | |
பதவியில் 26 நவம்பர் 2014 – 24 அக்டோபர் 2019 | |
பின்னவர் | அருண் சிங் |
தொகுதி | உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மார்ச்சு 1949 |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி பார்ட்டி |
துணைவர் | அசாம் கான் (m. 1981) |
பிள்ளைகள் | 2 (including Abdullah Azam Khan) |
முன்னாள் கல்லூரி | அலிகார்த் முஸ்லிம் பல்கலைக்கழகம் (M.A., M.Phil., Ph.D.) |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தில் உள்ள பில்கிராம் என்ற கிராமத்தில் முகமது அப்துல் கயூம் மற்றும் அஸ்காரி கட்டூன் ஆகியோருக்கு மகளாக 1949 மார்ச் 10 அன்று ஃபத்மா பிறந்தார்.[3] அவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பயின்றார் மற்றும் எம்.ஏ., எம்.பில்., மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்றவர்.[4]
அவர் கல்வித் துறையில் அரசியல் அறிவியலில் இணைப் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
டசீன் 1981 இல் அசாம் கானை மணந்தார். அவருக்கு அப்துல்லா மற்றும் அபீத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.அசாம் கான் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராகவும், உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராகவும் இருந்தார்.[5]
அரசியல்
தொகுஅக்டோபர் 2014 இல், ஃபத்மாவுக்கு சமாஜ்வாதி கட்சியில் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. இது தனது கணவருக்கு கட்சியால் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.[6] பின்னர், நவம்பரில், அவர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு மாநிலங்களவையில் உறுப்பினரானார்.
ஜனவரி 2015 இல், அவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[7] ராம்பூர் மற்றும் லக்னோவில் தங்கள் மகன் அப்துல்லாவுக்கு இரண்டு பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காகப் பல பிறப்புச் சான்றிதழ்களை வாங்கியதாகவும் அவருக்கும் அவரது கணவருக்கும் குற்றம் சாட்டப்பட்டது.இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் ஒருவர் 2019 ஜனவரியில் புகார் அளித்தார்.[8]
சர்ச்சைகள்
தொகுநில ஆக்கிரமிப்பு
தொகுடசீன் ஃபத்மா, அவரது மகன் அப்துல்லா அசாம் கானுடன், செப்டம்பர் 9, 2019 அன்று முகமது அலி ஜ ஹர் பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமித்ததாக நோட்டீஸ் கிடைத்தது.[9] ஹம்சாஃபர் ரிசார்ட்டைக் கட்டுவதற்காக அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்ததற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447 மற்றும் 184 ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.[10]
மின்சாரத் திருட்டு
தொகுசோதனையின்போது, ஆசாம் கான் மற்றும் டசீன் ஆகியோர் தங்கள் மின் மீட்டரின் நிறுவப்பட்ட திறனைத் தாண்டி சட்டவிரோதமாக மின்சாரத்தை நுகரக்கூடிய உபகரணங்களை நிறுவியதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.எனவே, 2019 செப்டம்பர் 6 ஆம் தேதி மின்சாரத்தை திருடியதற்காக அதிகாரிகள் டசீனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.[11]
போலி பிறப்புச் சான்றிதழ்
தொகுபிப்ரவரி 26, 2020 அன்று, டசீன் ஃபத்மா, அவரது கணவர் மற்றும் அவரது மகனுடன் போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார்.[12]
குறிப்புகள்
தொகு- ↑ "SP leaders including Tazeen Fatima file nominations for RS". news24online.com. Archived from the original on 23 August 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ "Tazeen Fatma". india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ "Tazeen Fatma, Dr. | National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-15.
- ↑ "National Portal of India".
- ↑ "Azam Khan's wife Tazeen Fatima unsure about RS ticket". intoday.in. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ "Azam Khan's wife Tazeen Fatima refuses Rajya Sabha ticket | News - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-16.
- ↑ "Tazeen Fatma, Dr. | National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-16.
- ↑ "Case against Azam Khan, wife & son for 2 birth certificates". Inshorts - Stay Informed (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-15.
- ↑ RampurSeptember 9, Indo-Asian News Service; September 9, 2019UPDATED; Ist, 2019 15:28. "Azam Khan's sons, wife get notice in land grabbing case". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-01.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ RampurSeptember 13, Asian News International; September 13, 2019UPDATED; Ist, 2019 00:14. "UP: Case registered against wife, sons of Azam Khan". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-01.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "FIR lodged against Azam Khan's wife for electricity theft in Rampur resort" (in en). India Today. Ist. https://www.indiatoday.in/india/story/fir-lodged-against-azam-khan-s-wife-for-electricity-theft-in-rampur-resort-1596089-2019-09-06.
- ↑ "Fake birth certificate case: Court stays Azam Khan, kin arrest". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
{{cite web}}
: CS1 maint: url-status (link)