டபிள்யூ. எச். ஆதன்

விஸ்டன் ஹக் ஆடன் (W. H. Auden 21 பிப்ரவரி 1907   - 29 செப்டம்பர் 1973) ஒரு ஆங்கில-அமெரிக்க கவிஞர். ஆடனின் கவிதைகள் அதன் பாங்கு மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் போன்றவற்றிற்காக பரவலாக அறியப்படுகின்றன. அரசியல், ஒழுக்கநெறிகள், அன்பு மற்றும் மதம் ஆகியவற்றுடன் அதன் ஈடுபாடு மற்றும் தொனி, வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய அம்சங்களுக்காகவும் இவரது கவிதைகள் அறியப்படுகிறது. " இறுதி ஊர்வலம் " பியூனரல் புளூஸ் போன்ற காதல் கவிதைகளுக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1]

Auden (1939)

இவர் யார்க்கில் பிறந்தார், பர்மிங்காம் அருகில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார். இவர் ஆங்கில சுயாதீன (அல்லது பொது ) பள்ள்யில் பயின்றார் மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் ஆங்கிலம் பயின்றார் . 1928-29ல் பேர்லினில் சில மாதங்களுக்குப் பிறகு, இவர் பிரித்தானிய பொதுப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் (1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை கல்வி பயின்றார். பின்னர் ஐஸ்லாந்து மற்றும் சீனாவுக்குச் சென்று தனது பயணங்களைப் பற்றிய புத்தகங்களை எழுதினார்.

1939 இல் இவர் அமெரிக்காவுக்குச் சென்று 1946 இல் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் 1941 முதல் 1945 வரை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கற்பித்தல்பணியினை மேற்கொண்டார், அதைத் தொடர்ந்து 1950 களில் பகுதி நேர பேராசிரியராகப் பணியாற்றினார்.

வாழ்க்கை தொகு

 
ஆடென் பிறந்த இடம் யார்க்கில்

இவரின் தந்தை மருத்துவரான ஜார்ஜ் அகஸ்டஸ் ஆடென் (1872-1957) மற்றும் தாய் கான்ஸ்டன்ஸ் ரோசாலி ஆடென் ஆகியோருக்கு இங்கிலாந்தின் யார்க்கில் ஆடென் பிறந்தார், இவர் ஒரு மிஷனரி செவிலியராக பயிற்சி பெற்றார் .ஆனால் இவர் அந்த பணியாற்றவில்லை.[2] இவரின் பெற்றோர்களின் மூன்று மகன்களில் மூன்றாவது மகன் ஆவார்; மூத்தவர், ஜார்ஜ் பெர்னார்ட் ஆடென் (1900-1978) ஒரு வேளான்மைப் பணி செய்து வந்தார். இரண்டாவது மகனான ஜான் பிக்னெல் ஆடென் (1903-1991) ஒரு புவியியலாளர் பணியினைச் செய்து வந்தார் .[3]

சர்ச் ஆஃப் இங்கிலாந்து மதகுருமார்களாக ஆடெனின் தாத்தாக்கள், இருந்தனர்.[4] ஒரு ஆங்கிலோ-கத்தோலிக்க குடும்பத்தில் இவர் வளர்ந்தார், இவர்களின் குடும்பம் உயர்தர ஆங்கிலிகனிசத்தைப் பின்பற்றியது. இவர் ஐஸ்லாந்திய புராணங்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் என்பது இவரின் படைப்புகளின் மூலம் அறியப்படுகிறது.

1908 ஆம் ஆண்டில் அவரது குடும்பம் பர்மிங்காமுக்கு அருகிலுள்ள சோலிஹல் எனும் பகுதியில் உள்ள ஹோமர் சாலைக்கு குடிபெயர்ந்தது,[5] அங்கு இவரது தந்தை பள்ளி மருத்துவ அதிகாரியாகவும், பொது சுகாதார விரிவுரையாளராகவும் (பின்னர் பேராசிரியராக) நியமிக்கப்பட்டார். இவரின் மனோவியல் தொடார்பான ஆர்வங்கள் அவரது தந்தையின் நூலகத்தில் இருந்து தொடங்கியது. எட்டு வயதிலிருந்தே இவர் உறைவிடப் பள்ளிகளில் பயின்றார், விடுமுறை தினங்களில் இவர் வீடு திரும்புவார்.[6] தனது 15 ஆம் வயதில் தான் பொறியியலாளர் ஆக வேண்டும் என எண்ணியதாகவும் பின் எழுத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் தான் இந்தத் துறையினைத் தேர்வு செய்ததாகவும் கூறினார்.

ஆதன் சர்ரேயின் ஹிண்ட்ஹெட் செயின்ட் எட்மண்ட் பள்ளியில் பயின்றார், அங்கு கிறிஸ்டோபர் இஷர்வுட்டை சந்தித்தார் [7] ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பள்ள்யில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இவர் 1922 ஆம் ஆண்டில் தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூவில் கேத்ரீனாவாகவும்,[8] மற்றும் 1925 ஆம் ஆண்டில் தி டெம்பஸ்டில் கலிபனாகவும் நடித்தார். இவரின் முதல் கவிதைகள் 1923 இல் பள்ளி இதழில் வெளிவந்தன.[9]

சான்றுகள் தொகு

 
ஆடென் பள்ளி - ஹிண்ட்ஹெட்


  1. Smith, Stan, ed.. The Cambridge Companion to W. H. Auden. 
  2. Carpenter, W. H. Auden, pp. 1-12.
  3. The name Wystan derives from the 9th-century St Wystan, who was murdered by Beorhtfrith, the son of Beorhtwulf, king of Mercia, after Wystan objected to Beorhtfrith's plan to marry Wystan's mother. His remains were reburied at Repton, Derbyshire, where they became the object of a cult; the parish church of Repton is dedicated to St Wystan. Auden's father, George Augustus Auden, was educated at Repton School.
  4. "Kindred Britain". பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  5. Mendelson, Edward (January 2011). "Auden, Wystan Hugh (1907–1973)". Oxford Dictionary of National Biography (online ed.). Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 26 May 2013. (subscription may be required or content may be available in libraries)
  6. Carpenter, W. H. Auden, pp. 16-20, 23-28.
  7. Auden, W. H. (1973). Forewords and Afterwords. பக். 517. https://archive.org/details/forewordsafterwo0000aude. 
  8. The Times, 5 July 1922 (Issue 43075), p. 12, col. D
  9. Auden, W. H. (1994). Juvenilia: Poems, 1922–1928. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ._எச்._ஆதன்&oldid=3925137" இலிருந்து மீள்விக்கப்பட்டது