டப்பாவாலா
டப்பாவாலா (மராத்தி: डबेवाला) என்போர் இந்தியாவில் குறிப்பாக மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் ஆவர். இதன் தலைவர் பவல்அகர்வால் ஐம்பது முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவர்.[1]
தொழில்நுட்பப் பயன்பாடு
தொகுடப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் காலணி கூட அணியாத படிப்பறிவற்றோரே. ஒருசில பெண்களோடு சேர்த்துப் பெரும்பாலும் ஆண்களே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகனம், நடை, இரயில் என்று பல்வேறு வழிகளை உணவைச் சேகரிக்கவும், சேர்ப்பிக்கவும் அவர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது குறுஞ்செய்தி நுட்பத்தையும் தங்கள் தொழிலில் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.[2]
இடையறாத சேவை
தொகுஇவர்களது பணியில் இடைவிடுப்பு என்பதே இல்லை. பருவமழைக் காலங்களிலும் இவர்கள் உரிய முறையில் பணிபுரிவர். டப்பாவாலாக்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள குறுக்கு வழிகள் அனைத்தும் தெரிந்திருக்கும்.
சிறப்புகள்
தொகு125 ஆண்டுகளாக நடைபெறும் டப்பாவாலா தொழில் ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து விழுக்காடு வளர்ச்சி அடைவதாக தி நியூயார்க் டைம்சு நாளிதழ் 2007ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.[3] வேல்சு இளவரசர் சார்லசு இந்தியா வந்திருந்த போது டப்பாவாலாக்களைச் சந்தித்தார். பிபிசி நிறுவனம் டப்பாவாலாக்கள் குறித்த ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது.
ஜன் லோக்பால் மசோதா ஆதரவு
தொகு125 ஆண்டு கால வரலாற்றில் ஒரு முறை கூட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிராத டப்பாவாலாக்கள் முதன் முறையாக ஆகஸ்டு 19, 2011 அன்று ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை ஆதரித்தும் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-20. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
- ↑ பிபிசி செய்தி
- ↑ நியூயார்க் டைம்சில் இருந்து
- ↑ http://www.dnaindia.com/mumbai/report_hazare-agitation-mumbai-s-dabbawalas-throw-hat-in-ring_1577347
வெளி இணைப்புகள்
தொகு- மும்பை டப்பாவாலா இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-11-10 at the வந்தவழி இயந்திரம்
- http://srkvijayam.com/2014/07/09/dabavala/ பரணிடப்பட்டது 2014-07-20 at the வந்தவழி இயந்திரம்