ஆர்ட்டெமிஸ் கோயில்

(டயானா கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.[1][2][3]

துருக்கியின் இசுத்தான்புல் நகரில் உள்ள மினியாதுர்க் பூங்காவில் காணப்படும் ஆர்ட்டெமிசு கோயிலின் மாதிரி வடிவம்.
ஆர்ட்டெமிஸின் சிலை

கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்

37°56′59″N 27°21′50″E / 37.94972°N 27.36389°E / 37.94972; 27.36389

மேற்கோள்கள்

தொகு
  1. John Freely, The Western Shores of Turkey: Discovering the Aegean and Mediterranean Coasts 2004, p. 148; Clive Foss, Ephesus after antiquity: a late antique, Byzantine, and Turkish city, Cambridge University Press, 1979, pp. 86–89 & footnote 83.
  2. Antipater, Greek Anthology IX.58.
  3. Pausanias, Description of Greece 7.2.6–8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ட்டெமிஸ்_கோயில்&oldid=3768715" இலிருந்து மீள்விக்கப்பட்டது