டலாஸ் சூறாவளி (2011)

(டலாஸ் (சூறாவளி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டலாஸ் (Talas) என்பது சப்பானின் மேற்குப் பகுதியை செப்டம்பர் 5 2011 இல் தாக்கிய சூறாவளியைக் குறிக்கும். இச் சூறாவளியின் வேகம் மணிக்கு 108 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை இருந்ததாகக் கூறப்பட்டது

டலாஸ் சூறாவளி (2011)
Typhoon (JMA scale)
Tropical storm (JTWC scale)
சூறாவளி மையம்
தொடக்கம்ஆகத்து 23, 2011
மறைவுஆகத்து 5, 2011
உயர் காற்று10-நிமிட நீடிப்பு: 120 கிமீ/ம (75 mph)
1-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph)
தாழ் அமுக்கம்965 hPa (பார்); 28.5 inHg
இறப்புகள்43 பேர் கொல்லப்பட்டனர், 56 பேரை காணவில்லை
பாதிப்புப் பகுதிகள்சப்பான்
2011 பசுபிக் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் தொகு

சப்பானின் மேற்கு பகுதியில் உள்ள நரா, வகயாமா மாகாணங்கள் மற்றும் சிக்கோக்கு தீவு ஆகியன அதிகளவில் பாதிப்புக்குட்டன.

இழப்புகள் தொகு

இச் சூறாவளி தாக்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 57 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டது. 106 பேர் காயமடைந்தனர். [1]சொத்துக்களின் இழப்பு மதிப்பீடு செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட 460,000 பேர் இடம்பெயர்ந்தனர். தாழ்வான பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டன

கடுமையான சூறாவளி தொகு

ஆண்டு தோறும் சப்பானை சூறாவளிகள் தாக்கி வருகின்றன. ஆனாலும் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டலாஸ் சூறாவளியே கடுமையானது எனக் கூறப்படுகிறது.

கடலை நோக்கி நகர்ந்தது தொகு

செப்டம்பர் 4, 2011 இல் டலாஸ் சூறாவளி சப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள கடலை நோக்கி நகர்ந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேற்கோள்கள் தொகு

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டலாஸ்_சூறாவளி_(2011)&oldid=3214403" இலிருந்து மீள்விக்கப்பட்டது