டவுனிங் சாலை, ஜார்ஜ் டவுன்
டவுனிங் சாலை (ஆங்கிலம்: Downing Street; மலாய்: Lebuh Downing சீனம்; 唐宁街) என்பது மலேசியா, பினாங்கு ஜார்ஜ் டவுன் நகரில் உள்ள ஒரு சிறிய தெரு ஆகும்.
டவுனிங் சாலை Downing Street | |
---|---|
பராமரிப்பு : | பினாங்கு தீவு மாநகராட்சி |
அமைவிடம்: | பினாங்கு ஜார்ஜ் டவுன் |
மேற்கு முனை: | பீச் வீதி |
கிழக்கு முனை: | கிடங்கு தெரு |
Construction | |
துவக்க நாள்: | 1880s |
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இலண்டனின் புகழ்பெற்ற டவுனிங் சாலைப் பெயருடன் (London's Downing Street); பினாங்கு டவுனிங் சாலையும் பெயரைப் பகிர்ந்து கொள்கிறது. உலகளாவிய நிலையில் டவுனிங் சாலைப் பெயரைப் பகிர்ந்து கொள்ளும் சில இடங்களில் பினாங்கு, டவுனிங் சாலையும் ஒன்றாகும்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தச் சாலை உருவாக்கப்பட்டது. நீரிணை குடியேற்றங்கள் அரசாங்கம் டவுனிங் சாலையில் ஒரு நிர்வாக வளாகத்தைக் கட்டியது. இவ்வாறு, இலண்டனில் உள்ளது போல், ஜார்ஜ் டவுனில் உள்ள டவுனிங் தெரு ஒரு காலத்தில் பினாங்கு அரசாங்கத்தின் நிர்வாக மையமாக இருந்தது..[1]
வரலாறு
தொகுஇந்த டவுனிங் சாலைப் பகுதி 1880-களில் ஒரு பெரிய நில மீட்பு திட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது;.ஜார்ஜ் டவுனின் குடிமைப் பகுதியின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. அரசாங்க அலுவலகங்களைத் தவிர, பிரித்தானிய அதிகாரிகள் டவுனிங் தெருவில் கல்வித் துறை, கருவூல அலுவலகம் மற்றும் இந்திய குடிவரவுக் கிடங்கு போன்ற நிர்வாகக் கட்டிடங்களையும் கட்டினார்கள்.
நிர்வாக செயல்பாடுகளின் காரணமாக், டவுனிங் தெரு, பினாங்கின் நீரிணை குடியேற்றத்தின் (Straits Settlements) நிர்வாக மையமாக மாற்றியது.
பினாங்கின் நிர்வாக இதயம்
தொகுஇருப்பினும், இந்தக் காலனித்துவ கட்டிடக் கலையின் பெரும்பகுதி இரண்டாம் உலகப் போரின் போது அழிக்கப்பட்டது. சப்பானிய மற்றும் நேச நாட்டு குண்டுவீச்சு விமானங்கள் (Japanese and Allied Bombers) இந்த குறிப்பிட்ட இடத்தை பினாங்கின் நிர்வாக இதயம் (Penang's Administrative Heart) என்ற முக்கியத்துவத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் தாக்கின.
இதனால் அரசாங்க அலுவலகங்கள் கிட்டத்தட்ட மொத்தமாக அழிக்கப்பட்டன. இன்று வரை அரசு அலுவலகங்களில் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. முந்தைய பிரித்தானிய அரசாங்க அலுவலகங்கள் இருந்த இடத்தில், இப்போது பினாங்கு இசுலாமிய மன்ற அலுவலகங்கள் (Penang Islamic Council Offices) மட்டுமே உள்ளன.
சான்றுகள்
தொகு- ↑ Khoo, Salma Nasution (2007). Streets of George Town, Penang. Penang, Malaysia: Areca Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789839886009.