டாக்டர். சாமர்வெல் நினைவு சி. எஸ். ஐ மருத்துவக் கல்லூரி, காரகோணம்

டாக்டர் சோமர்வெல் நினைவு சி எஸ் ஐ மருத்துவக் கல்லூரி என்பது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கரக்கோணத்தில் அமைந்துள்ள ஒரு சுயநிதி மருத்துவக் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரி டாக்டர் சோமர்வெல் நினைவுச் சேவை மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 2002 இல் நிறுவப்பட்டது. கேரளா பல்கலைக்கழகம், கேரளா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரள மாநிலத்தின் முதல் தனியார் மருத்துவமனையாக காரகோணம் மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Dr. Somervell Memorial CSI Medical College
உருவாக்கம்2002
சார்புகேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
தலைவர்அருட். திரு. தர்மராஜ் ரஸ்லாம்
முதல்வர்மருத்துவர். ஜே அனுஷா மெர்லைன்
பணிப்பாளர்மருத்துவர். ஜே. பென்னட் ஆபிரகாம்
அமைவிடம்8°23′27″N 77°10′24″E / 8.39094°N 77.17345°E / 8.39094; 77.17345
இணையதளம்https://www.smcsimch.ac.in

மருத்துவமனை & மருத்துவக் கல்லூரி மற்றும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தென்னிந்திய திருச்சபையின் தென் கேரள மறைமாவட்டத்தால் நடத்தப்பட்டு தென் கேரள மருத்துவ சேவையால் நிர்வகிக்கப்படுகின்றன. தென் கேரள மருத்துவ சேவை என்பது 1955 ஆம் ஆண்டின் திருவாங்கூர் கொச்சி இலக்கிய, அறிவியல் மற்றும் தொண்டு சங்கங்களின் பதிவுச் சட்டம் XII-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். தென் கேரள மருத்துவ சேவையின் அலுவலகம், சி.எஸ்.ஐ தெற்கு கேரள மறைமாவட்டத்தின் தலைமை அலுவலகமான எல்.எம்.எஸ் வளாகத்தில் உள்ளது. [2]

காரக்கோணம் திருவனந்தபுரம் மத்தியத் தொடருந்து நிலையத்திலிருந்து தெற்கே (கன்னியாகுமரி சாலையில்) 30 கிமீ தொலைவில் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து வெள்ளரடா சாலையை ஒட்டி, பாறசாலை அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அடிக்கடி சாலையில் செல்கின்றன. திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் நாகர்கோவில் இடையே ரயில் பாதையில் தனுவாச்சபுரம் ரயில் நிலையம் கல்லூரியில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. Somervell Memorial CSI Medical College".
  2. https://collegedunia.com/college/10412-dr-somervell-memorial-csi-medical-college-and-hospital-dr-smcsi-thiruvananthapuram/admission
  3. https://getmyuniversity.com/university/dr-somervel-memorial-csi-hospital-medical-college-karakonam-thiruvananthapuram

வெளி இணைப்புகள்

தொகு