டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் (சுருக்கமாக ஆர். கே. நகர் இடைத்தேர்தல், 2017) 2017 திசம்பர் 21 ஆம் நாள் தமிழ்நாடு, டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்காக நடந்தது.[1]

பின்னணி

தொகு

இத்தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 2016 திசம்பர் 5 அன்று காலமானதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் 2017 ஏப்ரல் 12 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.[2] ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து மறு தேதி குறிப்பிடாமல் ஏப்ரல் 9 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் இடைநிறுத்துவதாக அறிவித்தது.[3]

முக்கியத்துவம்

தொகு
 • அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறகு அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படத் தொடங்கியது. அதன்பிறகு இந்த அணியுடன் பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி இணைந்தது. சசிகலாவின் உறவினர் டி. டி. வி. தினகரன் தானே அதிமுக என்று அறிவித்து வருகிறார்.
 • அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் திமுகவிற்கு சாதகமாக அமையும் வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இடைநிறுத்தப்பட்ட ஏப்ரல் 2017 இடைத்தேர்தல்

தொகு

தேர்தல் அட்டவணை

தொகு

தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[2]

தேதி நிகழ்வு
16 மார்ச் 2017 மனுத்தாக்கல் ஆரம்பம்
23 மார்ச் 2017 மனுத்தாக்கல் முடிவு
24 மார்ச் 2017 வேட்புமனு ஆய்வு நாள்
27 மார்ச் 2017 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
12 ஏப்ரல் 2017 வாக்குப்பதிவு
15 ஏப்ரல் 2017 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிப்பு

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 113 14 127
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 82
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 8
களத்தில் இருந்த வேட்பாளர்கள் 54 8 62

முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி
மதிவாணன் தேமுதிக
தினகரன் அதிமுக (அம்மா)
மருது கணேஷ்[4] திமுக
மதுசூதனன் அதிமுக (புரட்சி தலைவி அம்மா)
கங்கை அமரன்[5] பாஜக
ஆர். லோகநாதன்[6] மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கலைகோட்டு உதயம் நாம் தமிழர் கட்சி
 • பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தாம் போட்டியிடவில்லை என அறிவித்தன.
 • இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் தாம் போட்டியிடவில்லை என்றும் வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தன.
 • அதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோருவதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.[7]
 • அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட காரணத்தாலும், அதிமுக என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதாலும், ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணி என்றும், சின்னமாக மின் கம்பம் சின்னமும், சசிகலா தரப்புக்கு அதிமுக (அம்மா) அணி என்றும், சின்னமாக தொப்பி சின்னத்தை அளிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.

திசம்பர் 2017 இடைத்தேர்தல்

தொகு

ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 2017 இல் நடக்கவிருந்த இடைத்தேர்தல் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகார்களைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்தது.[8]

இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டி. டி. வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர்.[9]

டி. டி. வி. தினகரன் வெற்றி

தொகு

இத்தேர்தலில் 77.5 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். டிசம்பர் 24 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி. டி. வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.[10]

மேற்கோள்கள்

தொகு
 1. "டிசம்பர் 21ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு". பார்க்கப்பட்ட நாள் 2-12-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 2. 2.0 2.1 "Byeelection2017/Schedule" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 9 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை". தி இந்து (தமிழ்). 10 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 4. "ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிப்பு". தி இந்து (தமிழ்). 16 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 5. "ஆர்.கே.நகரில் கங்கை அமரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை". தி இந்து (தமிழ்). 18 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 6. "ஆர்.கே.நகர் மார்க்சிஸ்ட் வேட்பாளராக லோகநாதன் அறிவிப்பு". தி இந்து (தமிழ்). 18 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 7. "EC freezes 'two leaves' for R.K. Nagar bypoll". இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 8. "ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் எப்படி? - ஓர் அலசல்!". ஆனந்த விகடன். 2017-12-04. Archived from the original on 2017-12-04. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2017.
 9. "ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது". மாலை மலர். 15 திசம்பர் 2017. Archived from the original on 2017-12-19. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2017.
 10. "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது". தி இந்து. 24 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2017.