டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம்

டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம் (Dr. APJ Abdul Kalam UIT Jhabua) என்பது இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் ஜபுவாவில் உள்ள ஒரு பொது (அரசு) கல்லூரி ஆகும். இந்த நிறுவனம் மத்தியப் பிரதேச அரசால் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம், ஜாபுவா என்ற பெயரில் நிறுவப்பட்டது. இது 2015ஆம் ஆண்டில் போபாலில் நிறுவப்பட்ட ராஜீவ் காந்தி புரோடியோகிகி பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாகும்.[1]

டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம்
குறிக்கோளுரைप्रज्ञानं ब्रह्म
(prajñânam brahmah)
(சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Consciousness is the Ultimate
வகைபொது
உருவாக்கம்2015
பட்ட மாணவர்கள்120
அமைவிடம்
அரசு பல்தொழில்நுட்ப்க் கல்லூரி, வளாகம், ஜாபுவா
, ,
வளாகம்நகரம், 35.667 ஏக்கர்
AcronymsUIT-RGPV JHABUA
சேர்ப்புRGPV
இணையதளம்uitjhabua.herokuapp.com

வரலாறு.

தொகு

பொறியியல் நிபுணத்துவத்தின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மத்தியப் பிரதேச அரசு 2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தினை உருவாக்கியது. இந்த நிறுவனம் ஆரம்பத்தில் கணினி அறிவியல், பொறியியல் மற்றும் இயந்திர பொறியியலில் இளநிலை பொறியியல் மற்றும் இளநிலை தொழில்நுட்பம் ஆகியவற்றை மட்டுமே வழங்கியது. இந்த நிறுவனம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமின் நினைவாக மறுபெயரிடப்பட்டது.[2]

பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்

தொகு

இளநிலை படிப்புகள்

தொகு

இளநிலை பொறியியல் மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்ட நான்கு ஆண்டுகள் (எட்டு பருவம்) படிப்புகளைப் பின்வரும் பாடங்களில் வழங்குகிறது.[3]

பாடம் மொத்த இருக்கைகள் துவக்க ஆண்டு
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 60 2015
இயந்திரவியல் பொறியியல் 60 2015

மேற்கோள்கள்

தொகு
  1. "RGPV website". https://www.rgpv.ac.in/Inst/InstitutionProfile.aspx
  2. "डॉ. कलाम के नाम पर होगा झाबुआ का इंजीनियरिंग कॉलेज". Nai Dunia (in இந்தி). 2015-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  3. Directorate of Technical Education M.P.". https://dte.mponline.gov.in/portal/services/onlinecounselling/counshomepage/home.aspx .