மத்திய பிரதேச அரசு
மத்திய பிரதேச அரசு என்பது மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித்துறை, சட்டவாக்க அவை, செயலாக்கத் துறை(அமைச்சரவை) ஆகிய பிரிவுகளைக் கொண்டது. மாநில அரசின் தலைமையகம் போப்பாலில் உள்ளது.
தலைமையிடம் | போப்பால் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | ராம் நரேஷ் யாதவ் |
முதலமைச்சர் | சிவ்ராஜ் சிங் சௌஃகான் |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | சீதாஷரண் சர்மா |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | அஜய் மாணிக் ராவ் கன்வில்கர் |
இந்தியக் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர், மாநில அரசின் தலைமை அலுவராக இருப்பார். ஆனால், மாநில முதல்வருக்கே அதிக அதிகாரம் இருக்கும்.
நீதித்துறை
தொகுமத்திய பிரதேச உயர் நீதிமன்றம் ஜபல்பூரில் உள்ளது. இது இம்மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாகும்.[1]
சட்டவாக்க அவை
தொகுமத்திய பிரதேச சட்டமன்றத்தில் 230 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். ஒருவர் மட்டும் நியமிக்கப்படுவார்.[2]
செயலாக்கத் துறை
தொகுசெயலாக்கத் துறையின் தலைவராக முதல்வர் இருப்பார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுப்பர். முதல்வருடன் சிலரும் அமைச்சரவையில் பங்கேற்பர். ஒவ்வொருவருக்கும் ஐந்தாண்டு காலம் பதவி இருக்கும்.
இதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
- ↑ "Madhya Pradesh Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.