டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சென்னையில் உள்ள ஒரு கல்லூரி

டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Dr. MGR-Janaki College of Arts and Science for Women) என்பது சென்னையில் சத்தியபாமா எம்ஜிஆர் மாளிகை வளாகத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் வி. என். ஜானகி ராமச்சந்திரன், தனது கணவர் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரனின் நினைவாக இந்தக் கல்லூரியை உருவாக்கினார். தற்போது இக்கல்லூரி சத்தியா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைExcellence through Diligence
வகைசுயநிதி
உருவாக்கம்1996
முதல்வர்ஆர். மணிமேகலை
கல்வி பணியாளர்
160
அமைவிடம்
11&13,துர்காபாய் தேஷ்முக் சாலை, சென்னை 600028
, , ,
இந்தியா

13°01′01″N 80°15′40″E / 13.0170°N 80.2610°E / 13.0170; 80.2610
வளாகம்நகர்புறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.mgrjanaki.ac.in

இணைப்பும் அங்கீகாரமும்

தொகு

இக்கல்லூரி கல்லூரி வழங்கும் படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றவையாகும். இக்கல்லூரி தமிழக அரசிடம் அனுமதி பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

குறிக்கோளுரை

தொகு

“விடாமுயற்சியின் மூலம் மேன்மை” என்பது கல்லூரியின் குறிக்கோளுரையாகும்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு