சத்தியா ஸ்டுடியோஸ்

தமிழக திரைப்பட நிறுவனம்

சத்யா ஸ்டுடியோஸ், (முன்பு நெப்டியூன் ஸ்டுடியோஸ் என்று அழைக்கப்பட்டது) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு இந்திய திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இது மிகவும் பழமையான திரைப்பட படப்பிடிப்பு வளாகங்களில் ஒன்றாகும். இது முன்பு "நெப்டியூன் ஸ்டுடியோ" என்று அழைக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பு வளாகத்தை முன்னாள் நடிகரும், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சருமான ம. கோ. இராமச்சந்திரன் வாங்கினார். [1] பின்னர் அதை சத்யா ஸ்டுடியோஸ் என்று பெயர் மாற்றினார்.

வரலாறு

தொகு

லலிதா சினிடோன் மற்றும் நேஷனல் தியேட்டர்ஸ் லிமிடெட் ஆக

தொகு

முதலில் சி. வி. ராமன் என்பவரால் தொடங்கப்பட்டது. அவர் ஆற்காடு நவாப்பிடமிருந்து சுமார் 25 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். [2] இந்த சொத்து அடையாறில் வடக்கே பசுமைவழிச் சாலை, தெற்கே அடையாறு ஆறு, புரூடி கோட்டையகத்தை எல்லைகளாக கொண்டிருந்தது.

ரூ. 150 மாத வாடகையில் எடுக்கபட்ட இந்த இடத்தில் 'லலிதா சினிடோன்' படப்பிடிப்பு வளாகத்தை நிறுவுவது நோக்கமாக கொண்டது. இருப்பினும், தயாரிப்பு நிறுவனம் நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. மேலும் எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவும் இல்லை. இதையடுத்து, காசி செட்டியார் மற்றும் ஆர். பிரகாஷ் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்டு சி. வி. இராமன் புதிதாக நிறுவிய 'நேஷனல் தியேட்டர்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் வசம் வளாகம் மாறியது. 1932 ஆம் ஆண்டு ஆர். பிரகாஷ் இயக்கிய `விஷ்ணு லீலா' என்ற ஊமைப் படம்தான் ஸ்டுடியோவிலிருந்து வெளிவந்த முதல் படம். பின்னர் என்.டி.எல். நிறுவனமும் பிரச்சனைகளில் மூழ்கியது. சி.வி இராமன் மற்றொரு தயாரிப்பு நிறுவனமான "மீனாட்சி சினிடோன்" ஐ இதே வளாகத்தின் ஒரு பகுதியில் தொடங்கினார்.

மீனாட்சி சினிடோனாக

தொகு

மீனாட்சி சினிடோன் சி. வி. ராமனால் பிரபல இந்திய தொழிலதிபரும், கொடையாளருமான அழகப்ப செட்டியாருடன் துவக்கப்பட்டது. 1930 களில் ஊமைத் திரைப்பட சகாப்தத்தில் நெப்டியூன் ஸ்டுடியோவை நிறுவிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. சுப்ரமணியம் இந்த இடத்தை வாங்கினார். அவரின் மற்றொரு திட்டத்தில் பிற இயங்குபட தயாரிப்பாளர்களும் இணைகி்ன்றனர். அது எஸ். எஸ். வாசனின் கீழ் ஜெமினி ஸ்டுடியோவாக பிற்காலத்தில் மாறியது. 1934 ஆம் ஆண்டில், ஸ்டுடியோவானது தமிழ் பேசும் படமான "பவளக்கொடி"யை வெளியிட்டது. அதில் தென்னிந்தியாவின் முதல் உச்ச நட்சசத்திரமான எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் அதன் இயக்குனராக மாறிய திரைப்படத் தயாரிப்பாளரான கே. சுப்பிரமணியம் மற்றும் நட்சத்திர நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகியோரின் அறிமுகமாயினர்.

ஜூபிடர் பிக்சர்சின் கீழ்

தொகு

சத்யா ஸ்டுடியோவாக

தொகு

நெப்டியூன் ஸ்டுடியோஸ் பின்னர் ம. கோ. இராமச்சந்திரன் குடும்பத்தால் வாங்கப்பட்டது. அவர் அதை சத்யா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றினார். இப்போது இங்கு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் பெண்களுக்கான கல்லூரி செயல்பட்டு வருகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "AIADMK founder MG Ramachandran's will may hold key to ongoing leadership tussle". பார்க்கப்பட்ட நாள் 2023-11-28.
  2. "Setback for road project as court stalls takeover of land leased to Sathya Studios". The Times of India. 2023-04-06. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/chennai/setback-for-road-project-as-court-stalls-takeover-of-land-leased-to-sathya-studios/articleshow/99282624.cms. 
  3. "Home". பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியா_ஸ்டுடியோஸ்&oldid=3860948" இலிருந்து மீள்விக்கப்பட்டது