டாக்டைல் (TakkTile) எனபது இதுவரை வடிவமைக்கப் பட்டதிலேயே மிக விலை மலிவான ஒரு வகைத் தொட்டறி உணரி ஆகும்.[1] இதுகாறும் தொட்டறி உணரியை தயாரிப்பது கடினமானதாகவும், விலையுயர்ந்து வந்ததாகவும் இருந்து வந்தன. கடந்த ஏப்ரல் 18, 2013 அன்று ஹாட்டுவேர்டு பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் கழக அறிக்கையின் படி, மிக எளிமையான வடிவமைப்பையும், விலை மலிவாகவும், 1-கிராம் தொடுதிறன் வரை கொண்டதாக டாக்டைல் விளங்குகிறது.[2]

இதில் ஒரு சிறிய காற்றழுத்தமானியும், வெற்றிடம் அடைத்த இரப்பரின் அடுக்கு ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டாக்டைல் தொட்டறி உணரியினால் காற்று அழுத்தத்தை உணரவும், 20 பவுண்டு நேரடி அழுத்தத்தை எதிர்கொள்ளவும் முடியும் என ஆய்வாளர்கள் கூறினர்.[3] மேலும் இது பிற தானியங்கியின் கைகளை முரட்டுத்தனமாக செயல்படவைப்பதை போலல்லாமல் மென்மையான செயல்பாட்டினை கையாளுவதால் இதனை மருத்துவ சிகிச்சை செய்யக்கூடப் பயன்படுத்த முடியும் என்று சென்டோஃப்டு மற்றும் டென்சர் ஆகிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தானியங்கியலில் இதனால் பெறும் தாக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "டாக்டைல் இணையத்தளம்". Archived from the original on 2013-04-23. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 19, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Tactile sensor brings a new dimension to robotics". நியூ எலக்ட்ரானிக்ஸ். ஏப்ரல் 18, 2013. Archived from the original on 2013-04-21. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 19, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Robot hands gain a gentler touch". Archived from the original on 2013-04-19. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 19, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "தானியங்கி கை மென்மையான தொடுதலை அடைந்துள்ளது". விக்கிசெய்திகள். ஏப்ரல் 19, 2013. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 19, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்டைல்&oldid=3665870" இலிருந்து மீள்விக்கப்பட்டது