டார்க் (தொலைக்காட்சி தொடர்)
டார்க் (Dark) என்பது ஒரு அறிவியல் புனைகதையை மையமாக கொண்ட ஜெர்மானிய வலைத்தொடராகும். இந்த தொடரை பாரன் போ ஒடார் மற்றும் ஜாண்ட்ஜி ப்ரீசி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்.
டார்க் | |
---|---|
வகை |
|
உருவாக்கம் |
|
எழுத்து |
|
இயக்கம் | பாரன் போ ஓடர் |
முகப்பு இசை | அப்பாரட் |
பின்னணி இசை | பென் புரோஸ்ட் |
நாடு | ஜெர்மனி |
மொழி | |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 26 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | ஜெர்மனி |
ஒளிப்பதிவு | நிகோலஸ் சம்மரர் |
ஓட்டம் | 44–73 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | வைட்மேன் & பெர்க் தொலைக்காட்சி |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | நெற்ஃபிளிக்சு |
ஒளிபரப்பான காலம் | 1 திசம்பர் 2017 27 சூன் 2020 | –
வெளியிணைப்புகள் | |
https://darknetflix.io/en இணையதளம் |
டார்க் தொடர் நெற்ஃபிளிக்சின் முதல் ஜெர்மானிய மொழி தொடராகும்,[1] இது 1 திசம்பர் 2017, முதல் இது நெற்ஃபிளிக்சின் அதிகாரப்பூர்வ தளத்தில் காணக்கிடைக்கிறது. இதன் முதல் பருவம் பொதுவாக நல்ல வரவேற்பினை பெற்றபொழுதும், ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் எனப்படும் மற்றொரு வலைத்தொடருடன் இது கொண்டிருந்த ஒற்றுமை காரணமாக ஒப்பிட்டுப் பேசப்பட்டது.
இதன் இரண்டாவது பருவம் 21 சூன் 2019, அன்று நெற்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டு அதுவும் நல்ல வரவேற்பினை பெற்றது. டார்க் மூன்றாவது பருவத்துடன் முற்றுப்பெரும் என நெட்ப்பிலிக்ஸ் அறிவித்துள்ளது.[2]
டார்க் தொடர் அதன் நடிகர்கள், இயக்கம், எழுத்து, காட்சியமைப்பு, இசையமைப்பு மற்றும் அதன் கதையின் லட்சியம் மற்றும் சிக்கலான தன்மை ஆகியவற்றிற்காக பரவலான விமர்சனப் பாராட்டைப் பெற்றது. அத்துடன் 2021 ஆம் ஆண்டில், பிபிசி நிறுவனம் இந்தத் தொடரை 21 ஆம் நூற்றாண்டின் 58 வது சிறந்த தொலைக்காட்சித் தொடராக மதிப்பிட்டது.[3]
கதை
தொகுவிண்டன் எனும் கற்பனையான ஒரு நகரில் நடப்பதாக கட்டமைக்கப்பட்ட இந்த தொடர் ஒரு சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போனதை தொடர்ந்து அந்த நகரில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் நான்கு குடும்பங்களுக்கு இடையேயான தொடர்புகளையும்,ரகசியங்களையும் மெல்ல வெளிக்கொணர்வதோடு விரும்பத்தகாத காலப்பயணத்தை யையும் கட்டவிழ்க்கிறது. டார்க் காலத்தினால் மனிதனின் வாழ்க்கையில் எழுதப்படும் இருண்ட பக்கங்களை புரட்டிச்செல்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dark, The First Netflix Original Series Produced In Germany Commences Principal Photography (டார்க், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட முதல் நெட்ஃபிக்ஸ் அசல் தொடர் ஆகும்.)". Netflix Media Center. 18 October 2016. Archived from the original on 3 February 2018. பார்க்கப்பட்ட நாள் 24 October 2016.
- ↑ Grater, Tom (26 May 2020). "Dark Season 3: Netflix Dates Final Entry In Time-Twisting German Original; Watch Debut Trailer". Deadline. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
- ↑ "The 100 greatest TV series of the 21st Century". BBC Culture. 18 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.