டார்வினின் புடைப்பு

டார்வினின் புடைப்பு (Darwin's tubercle) என்பது மனிதக் காதின் ஓரத்தில் மேலே உள்ள மூன்‌றில் ஒரு பகுதியும் கீழே உள்ள பகுதியும் சந்திக்கும் இடத்தில் காணப்படும் ஒரு சிறிய முடிச்சு அல்லது புடைப்பு ஆகும். இது உலக மக்கட்தொகையில் பத்தில் ஒருவருக்குக் காணப்படும் இயற்கையான ஒன்று ஆகும். இது மாந்தர், குரங்கு, பொனொபோ போன்ற முதனிகளின் பொதுவான மூதாதைய இனங்களில் இருந்து வந்த பண்பாகும். படிவளர்ச்சிக்கான சான்றாகவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

மனிதரில் காணப்படும் புடைப்பையும் குரங்கில் அதே இடத்தில் காணப்படும் புடைப்பையும் ஒப்பு நோக்குக

இது டார்வின் புடைப்பு என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் டார்வினே இதற்கு ஊல்னரின் நுனி என்று தான் பெயரிட்டார். ஏனெனில் தாமசு ஊல்னர் எனும் ஆங்கிலச் சிற்பி தான் முதன் முதலில் இதைத் தனது சிற்பத்தில் பயன்படுத்தியதோடு இது பரிணாமச் சான்று எனும் கருதுகோளையும் உருவாக்கியவர் ஆவார்.

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்வினின்_புடைப்பு&oldid=3772724" இலிருந்து மீள்விக்கப்பட்டது