டாலி ஜெயின்

டாலி ஜெயின், இந்தியாவின் பெங்களூருவை பூர்விகமாகக் கொண்ட பெண்களுக்கான புடவை மற்றும் உடைகளை அணிவித்துவிடும் தொழிலைக் கொல்கத்தாவில் நடத்தி வரும் பெண் தொழிலதிபராவார்.[1] [2]

டாலி ஜெயின்
பிறந்தது
பெங்களூரு, கர்நாடகா
தேசியம் இந்தியன்
இணையதளம் dollyjain.com

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

டாலி ஜெயின், கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள கலாச்சாரத்தின் படி உடையணிந்து வாழ்ந்து வந்தார். தனது காதலரான, நவீன் ஜெயினை திருமணம் செய்து, பெங்களுருவில் இருந்து கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

தொழில்

தொகு

தனது மாமியாரின் அறிவுறுத்தலின் படி, திருமணத்திற்கு பின்பு புடவை கட்ட வேண்டிய கட்டாயத்தில் முதன்முறையாக தினமும் சேலை கட்ட ஆரம்பித்தார். ஆனால் ஒரே மாதிரியான முறையில் புடவை கட்ட பிடிக்காமல் தினம் தினம் புதுமையான முறையில் கட்ட ஆரம்பித்தார், ஒரு காலகட்டத்தில், நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட முறைகளில் புடவைகளை கட்ட ஆரம்பித்துள்ளார். மேலும் திருமண வீடுகளில் மணப்பெண்ணுக்கு சேலை கட்ட உதவிசெய்துள்ளார். டாலியின் புடவை கட்டிவிடும் திறமையை கவனித்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சந்தீப் கோஸ்லா, இவரை பல்வேறு பிரபலங்களுக்கும், நடிகைகளுக்கும் அறிமுகப்படுத்தி விட்டுள்ளார். அதனடிப்படையில் இதனை ஒரு தொழிலாகவே நடத்த தொடங்கியுள்ளார். [3] [4]

2019 ஆம் ஆண்டில், முன்னூறுக்கும் மேற்பட்ட வகைகளில் புடவைகளை கட்டுவதற்கும், ஒரு புடவையை கட்டி முடிக்க 18.5 வினாடிகளே எடுத்ததற்கும் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார், [5] சோனம் கபூர், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, இஷா அம்பானி மற்றும் ஆலியா பட் போன்றோரின் திருமணத்திற்கும், மறைந்த தமிழக அரசியல்வாதியான ஜெயலலிதா மற்றும் இசுமிருதி இரானி போன்றோருக்கும் புடவைகளை கட்டிவிட்டு அலங்கரித்துள்ளார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Drape it like Dolly Jain". The Hindu. 24 September 2019. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  2. "How she converted Saree draping into an art and a niche career - Dolly Jain dresses Isha Ambani". 1 January 2019. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  3. "Drapery diva dolls up all". 17 March 2019. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  4. 4.0 4.1 "How Dolly Jain went from a housewife to celebrity saree draper for Ambanis, PeeCee, Deepika". 29 December 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  5. "Sari seems to be the hardest drape". 7 March 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாலி_ஜெயின்&oldid=3680340" இலிருந்து மீள்விக்கப்பட்டது