டிசுகனெக்டு
டிசுகனெக்டு (Disconnect/Disconnect Mobile/Disconnect.me) என்பது தடம் காட்டமலும், தனிநபர் உரிமையை மீறாமலும் செயற்படும் இணைய உலாவிகளில் ஒன்றாகும். இதன் கட்டகம் குறிப்பிட்ட அளவு திறநிலை மென்பொருட்களைப் பயன்படுத்துகிறது. [1] ஆன்ட்ராய்டு, ஐ-போன் ஆகிய நகர்பேசிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பிரைன் கென்னிசு,(Brian Kennish and Casey Oppenheim) கசே ஆப்பென்இம் என்பவர்களால் இது உருவாக்கப்பட்டது.[2] 2015 ஆம் ஆண்டு முதல் இதன் தேடுபொறி (Disconnect-Search), டார் உலாவியின் இயல்பிருப்பான தேடுபொறியாக அமைக்கப்பட்டுள்ளது.[3] இதில் கட்டணம் செலுத்திப் பெறக்கூடிய மேலதிக வசதிகளைப் பெற இயலும்.[4] பின்புலத்தில் இயங்கும் தேவையற்ற நிரல்களை இது நிறுத்தி, மின்கலத்திறனை அதிகரிக்கும் வசதி, 40-45 % அதிக வேகமாக செயற்படும் உலாவல் திறன் போன்றவை மேலதிக வசதிகளாகக் கூறப்படுகின்றன. உங்களது உலாலிடம், இந்நிறுவனத்தின் மெய்நிகர் தனியார் பிணையம் (VPN) மறைத்து, நமது தனியுரிமையையும், அடையாளத்தையும் காக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Disconnect. "Online Privacy & Security".
- ↑ Disconnect. "Disconnect". Archived from the original on 2013-12-06.
- ↑ "#14490 (Make Disconnect Search the default search engine for Tor Browser alpha) – Tor Bug Tracker & Wiki".
- ↑ https://disconnect.me/