டியர் ஃபிரண்ட் இட்லர்

ராஜேஷ் கன்ஜன் குமார் இயக்கிய 2011 ஆண்டையத் திரைப்படம்

டியர் ஃபிரண்ட் இட்லர் (Dear Friend Hitler (இந்தி: प्रिय मित्र हिटलर), இந்தியாவில் காந்தி டூ இட்லர் என்ற பெயரில் வெளியன திரைப்படமானது, ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு பன்மொழித் திரைப்படமாகும். இப்படத்தில், ரோகிபிர் யாதவ் அடோல்ப் ஹிட்லராகவும் நேஹா துபியா இவா பிரானாக நடித்துள்ளார். ராகேஷ் ரஞ்சன் குமார் இயக்கியுள்ள இப்படத்தை, அனில் குமார்சர்மாரின் அமர்ராளி மீடியா விசன் தயாரித்துள்ளது.   பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.[3][4] இத்திரைப்படம் குறித்து பிசினஸ் ஆசியாவானது   "ஆத்திரமூட்டும் பெயரைக் கொண்டிருந்தபோதிலும், இந்த படம் கொலைகார பியூரருக்கு புகழுரை அல்ல" எனக் குறிப்பிட்டது.[5] இது இந்தியாவில் 2011 சூலை 29 அன்று வெளியானது.

டியர் ஃபிரண்ட் இட்லர்
இயக்கம்ராகேஷ் ரஞ்சன் குமார்[1]
தயாரிப்புடாக்டர் அனில் குமார் சர்மா
திரைக்கதைராகேஷ் ரஞ்சன் குமார்
இசைஅரவிந்த் லியோன்
பின்னணி இசை:
சஞ்சய் சவுத்ரி
நடிப்புநலிந்த் சிங், ரகுபிர் யாதவ்
நேஹா
துபியா அமன் வர்மா]][1]
ஒளிப்பதிவுஃபுவத் கான்
படத்தொகுப்புஸ்ரீ நாராயண் சிங்
விநியோகம்அமராபலி மீடியா விஷன் பிரைவேட். லிமிடெட்
வெளியீடு29 சூலை 2011 (2011-07-29)[2]
நாடுஇந்தியா
மொழிஇந்தி

கதை தொகு

இப்படமானது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடப்பதாக உள்ளது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் (அவிஜித் தத்) அட்ல்ஃப் இட்லருக்கு (ரகுபிர் யாதவ்) எழுதப்பட்ட கடிதங்களை அடிப்படையாக கொண்டும், இட்லரின் நீண்ட கால காதலியான ஈவா பிரவுன் (நேஹா துபியா) உடனான இட்லரின் உறவைச் சுற்றியும், அவர்கள் இறப்பதற்கு முன்னதாக பியூரர் பதுங்கு அறையில் திருமணம் செய்துகொண்டதைப் பற்றியதாகவும் உள்ளது. இதில்   காந்தி மற்றும் இட்லரின் கருத்தியல்களுக்கு இடையிலான வித்தியாசம் குறித்தும், நாசிசத்தைவிட காந்தியத்தின் மேன்மை குறித்தும் சித்தரித்து கூறப்பட்டுள்ளது.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இட்லர் பாத்திரத்தில் நடிக்க முதலில் அனுபம் கெர் ஒப்புக்கொண்டார், ஆனால் பல இலட்சக் கணக்கான யூதர்களை பெரும் இன அழிப்பு செய்த இட்லர் பாத்திரத்தில் நடிப்பதற்காக, இந்தியாவில் உள்ள யூத அமைப்புக்களால் அவருக்கு எழுந்த கண்டனங்களையடுத்து அவர் பின்வாங்கினார்.[6][7]

வரவேற்பு தொகு

இப்படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியர் அல்லாத அனைத்துப் பாத்திரங்களிலும் நடிக்க இந்திய நடிகர்களையே பயன்படுத்தியுள்ளதாக இப்படத்தை என்டிடிவி விமர்சித்தது.[8] கோயோமி படத்துக்கு 0.5 / 5 மதிப்பெண் வழங்கியது; இட்லராக நடித்த யாதவின் நடிப்பை பாராட்டிய போதிலும், படத்தின் திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்பம், ஒலிப்பதிவு மற்றும் பிற நடிகர்களின் நடிப்பு போன்றவற்றை விமர்சித்தது.[9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Opening Credits". dearfriendhitlerthefilm.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Gandhi to Hitler / Dear Friend Hitler - Times Of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times Group). 4 July 2011 இம் மூலத்தில் இருந்து 8 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120908043926/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-04/bollywood/29735049_1_dear-friend-hitler-dear-friend-hitler-cannes-film-festival. பார்த்த நாள்: 2 August 2011. 
  3. Entertainment Desk (5 March 2011). "Berlin cleared misconceptions about 'My Friend Hitler': Scriptwriter". Banglanews24. Archived from the original on 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 18 March 2011.
  4. Times News Network (22 February 2011). "Hitler goes to Berlin". The Times Group இம் மூலத்தில் இருந்து 5 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405211557/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-22/news-interviews/28624655_1_dear-friend-hitler-adolf-hitler-berlin-film-festival. பார்த்த நாள்: 18 March 2011. 
  5. "Indian Hitler film gets Berlin launch". 24 March 2011. பார்க்கப்பட்ட நாள் 24 March 2011.
  6. Bollywood Hungama News Network (19 June 2010). "Anupam Kher bows out from Dear Friend Hitler". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 18 March 2011.
  7. Indian Express Agencies (7 March 2011). "Anupam Kher's backout hurt Neha Dhupia". Indian Express Limited. http://www.indianexpress.com/news/anupam-khers-backout-hurt-neha-dhupia/758980/. பார்த்த நாள்: 19 March 2011. 
  8. "Gandhi to Hitler". 29 July 2011. Archived from the original on 30 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 July 2012.
  9. "Gandhi To Hitler Review". பார்க்கப்பட்ட நாள் 13 July 2012.     

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டியர்_ஃபிரண்ட்_இட்லர்&oldid=3817689" இலிருந்து மீள்விக்கப்பட்டது