டிரைசைக்ளோயெக்சைல்பாசுபீன்
டிரைசைக்ளோயெக்சைல்பாசுபீன் (Tricyclohexylphosphine) என்பது P(C6H11)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமச் சேர்மமாகும். மூவிணைய பாசுபீனாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் பொதுவாக கரிம உலோக வேதியியலில் ஒரு ஈந்தணைவியாகப் பயன்படுகிறது. பயன்பாட்டிற்காக PCy3,என்ற சுருக்கப்பெயரால் இது அழைக்கப்படுகிறது. இங்குள்ள Cy சைக்ளோயெக்சைல் தொகுதியைக் குறிக்கிறது. உயர் காரத்தன்மை (pKa = 9.7) [1]மற்றும் பெரிய ஈந்தணைவி கூம்புக் கோணம் (170°) ஆகிய பண்புகளால் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது[2][3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைசக்ளோயெக்சைல்பாசுபேன்
| |
வேறு பெயர்கள்
P(Cy)3
PCy3 | |
இனங்காட்டிகள் | |
2622-14-2 | |
ChemSpider | 68315 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 75806 |
| |
பண்புகள் | |
C18H33P | |
வாய்ப்பாட்டு எடை | 280.43 g மோல்−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 82 °C (180 °F; 355 K) |
கரிமக் கரைப்பான்கள் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நோபல் பரிசு வென்ற கிரப்சு வினையூக்கியும் ஒத்தவரிசை ஐதரசனேற்ற வினையூக்கியான கிராப்ட்ரீ வினையூக்கியும் P(Cy)3 ஈந்தணைவிகளைப் பெற்றுள்ள முக்கியமான அணைவுச் சேர்மங்களாகும்.
-
முதல் தலைமுறை கிரப்சு வினையூக்கி)
-
கிராப்ட்ரீ வினையூக்கி
மேற்கோள்கள்
தொகு- ↑ Streuli, C. A. (1960). "Determination of Basicity of Substituted Phosphines by Nonaqueous Titrimetry". Anal. Chem. 32: 985–987. doi:10.1021/ac60164a027.
- ↑ Bush, R. C.; Angelici, R. J. (1988). "Phosphine basicities as determined by enthalpies of protonation". Inorg. Chem. 27 (4): 681–686. doi:10.1021/ic00277a022.
- ↑ Immirzi, A.; Musco, A. (1977). "A Method to Measure the Size of Phosphorus Ligands in Coordination Complexes". Inorg. Chim. Acta 25: L41–42. doi:10.1016/S0020-1693(00)95635-4.