டிரைபுளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு
டிரைபுளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு (Trifluoromethyl hypofluorite) என்பது OCF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இக்கரிமபுளோரின் சேர்மம் அறைவெப்ப நிலையில் நிரமற்ற வாயுவாகவும் உயர் நச்சுத்தன்மை கொண்டும் உள்ளது[1]. O-F பிணைப்பு உடைய ஐப்போபுளோரைட்டு சேர்மத்திற்கு இதை ஓர் அரிய உதாரணமாகக் கூறலாம். கார்பனோராக்சைடுடன் புளோரின் வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிரைபுளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு உருவாகிறது.
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
373-91-1 | |||
ChemSpider | 71322 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 78989 | ||
| |||
பண்புகள் | |||
OCF 4 | |||
வாய்ப்பாட்டு எடை | 104.004012 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
உருகுநிலை | −213 °C (−351.4 °F; 60.1 K) | ||
கொதிநிலை | −95 °C (−139 °F; 178 K) | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |||
2 F2 + CO → CF3OF
நடுநிலை pH இல் மட்டும் இவ்வாயு மெல்ல நீராற்பகுப்பு அடைகிறது.
கரிம வேதியியல் பயன்
தொகுஎலக்ட்ரான்கவர் புளோரினுக்கு இச்சேர்மமே ஆதார மூலமாகும். சிலில் ஈனோல் ஈதர்களிலிருந்து α-புளோரோகீட்டோன்கள் தயாரிப்பதற்கு இச்சேர்மம் பயன்படுகிறது [2].
இச்சேர்மம் ஒரு போலி ஆலசனைப் போல செயல்பட்டு எத்திலீனுடன் சேர்ந்து ஈத்தரைக் கொடுக்கிறது.
- CF3OF + CH2CH2 → CF3OCH2CH2F
மேற்கோள்கள்
தொகு- ↑ Cady, G (1966). "Trifluoromethyl Hypofluorite". Inorganic Syntheses 8: 168. doi:10.1002/9780470132395.ch43.
- ↑ Middleton, W. J.; Bingham, E. M. (1980). "α-Fluorination of carbonyl compounds with trifluoromethyl hypo fluorite". Journal of the American Chemical Society 102: 4845–6. doi:10.1021/ja00534a053.