டிரையெத்திலிண்டியம்
டிரையெத்திலிண்டியம் (Triethylindium) என்பது C6H15In [1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கரிம உலோகச் சேர்மங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரையெத்திலிண்டியம்
| |
வேறு பெயர்கள்
இண்டியம் டிரையெத்தில், டிரையெத்திலிண்டிகேன், இண்டியம்டிரையெத்தில்
| |
இனங்காட்டிகள் | |
923-34-2 | |
ChemSpider | 92075 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101912 |
| |
பண்புகள் | |
C6H15In | |
வாய்ப்பாட்டு எடை | 202.00 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 144 °C (291 °F; 417 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H250, H314 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇண்டியம்(III) குளோரைடின் ஈதர் கரைசலை எத்தில் மக்னீசியம் குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இண்டியம் டிரையெத்தில் தயாரிக்கலாம்.
InCl3 + 3C2H5MgCl → In(C2H5)3 + 3MgCl2
இதைப்போல வேறு தொகுப்பு முறைகளும் உள்ளன [3].
பண்புகள்
தொகுஇண்டியம் டிரையெத்தில் நிறமற்று, நஞ்சுத் தன்மையுடன் காணப்படும் ஒரு நீர்மமாகும். இந்நீர்மம் எளிதாக ஆக்சிசனேற்றம் மற்றும் நீராற்பகுப்புக்கு உட்படும். வாயு நிலையிலும் கரைந்த நிலையிலும் இதுவோர் ஒற்றைப்படியாகக் காணப்படுகிறது. ஆலோமீத்தேன்களுடன் இண்டியம் டிரையெத்தில் வினைபுரிந்து டையெத்தில் இண்டியம் ஆலைடு உருவாகிறது [4]. மேலும் இது தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது.
In(C2H5)3 + H2O → In(C2H5)2OH + C2H6↑
பயன்கள்
தொகுகுறைகடத்திகளுக்கான இண்டியம் பாசுபைடு மெல்லேடுகளைத் தயாரிக்க இண்டியம் டிரையெத்தில் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "INDIUM TRIETHYL". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
- ↑ "Substance Name: Indium, triethyl". chem.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
- ↑ Cowley, Alan H. (2009). Inorganic Syntheses. John Wiley & Sons. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-13297-3.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Maeda, Takayoshi; Tada,, Hisashi; Yasuda,, Kiyoshi; Okawara, Rokuro (11 September 1970). "Reactions of triethylindium with halomethanes: preparations and properties of diethylindium halides". Journal of Organometallic Chemistry 27 (1): 13-18. doi:10.1016/S0022-328X(00)82987-3. http://www.sciencedirect.com/science/article/pii/S0022328X00829873?via%3Dihub.