டி. எம். செல்வகணபதி

இந்திய அரசியல்வாதி

டி. எம். செல்வகணபதி (T. M. Selvaganapathy) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், 1991-ஆம் ஆண்டில் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1991 முதல் 1996 வரையான காலத்தில் ஜெயலலிதா அரசு உள்ளூராட்சி நிர்வாக அமைச்சராகவும் இருந்தவர். முதலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்தவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.[1] 30 மே 2000 அன்று வண்ணத் தொலைக்காட்சி ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டது. பின்னர் 4 டிசம்பர் 2001 அன்று உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.[2][3]

சூன் 2010 இல், இவர் மாநிலங்களவை உறுப்பினரானார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கூரைகள் அமைப்பதில் ஊழல் செய்ததாகத் 1997 இல் தொடரப்பட்ட வழக்கில் டி. எம். செல்வகணபதிக்கு 2014 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.[4][5] இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டதால், பதவியிலிருந்து விலகினார். ஊழலுக்காக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் தமிழ்நாடு அரசியல்வாதி ஆனார்.[6]

இதனையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._செல்வகணபதி&oldid=4001338" இலிருந்து மீள்விக்கப்பட்டது