டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி
டி.எஸ். சேனநாயக்கா கல்லூரி (D. S. Senanayake College, சிங்களம்: ඩී.ඇස්.සේනානායක විද්යාලය) என்பது இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் தேசியப் பாடசாலைகளில் ஒன்றாகும். இது கொழும்பு, கறுவாத்தோட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை வகுப்புகள் உள்ளன. இப்பாடசாலை 1967 பெப்ரவரி 10 இல் தொடங்கப்பட்டது. ஆர். ஐ. டி. அலசு என்பவர் இதன் முதலாவது தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.[1][2] இலங்கையின் முதலாவது பிரதமர், டி. எஸ். சேனநாயக்காவின் பெயரால் இக்கல்லூரி அழைக்கப்படுகிறது.
டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி D. S. Senanayake College | |
---|---|
பாடசாலையின் நுழைவாயில் | |
முகவரி | |
62, ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை, கறுவாத் தோட்டம் கொழும்பு, மேற்கு மாகாணம், 00700 இலங்கை | |
அமைவிடம் | 6°54′30″N 79°52′29″E / 6.90833°N 79.87472°E |
தகவல் | |
பிற பெயர்கள் |
|
வகை | தேசியப் பாடசாலை 1AB அரசுப் பள்ளி |
குறிக்கோள் | சுயத்திற்கு முன் நாடு (Country Before Self) |
தொடக்கம் | 10 பெப்ரவரி 1967 |
பள்ளி மாவட்டம் | கொழும்பு |
அதிபர் | சம்பத் வெரகொட |
ஆசிரியர் குழு | 284 |
தரங்கள் | 1-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 6 -19 |
மொத்த சேர்க்கை | 6000 - 8000 |
கற்பித்தல் மொழி | |
பள்ளி நேரம் | 07:30 - 13:30 |
இல்லங்கள் |
|
நிறங்கள் |
|
கீதம் | "சிப் சத்த சிஸ் வெத்த" |
Newspaper | சியபத்த |
இணையம் | dssenanayakecollege |
இப்பாடசாலையில் தரம் 1 முதல் 13 வரை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கற்பித்தல் நடைபெறுகின்றன. தற்போது இக்கல்லூரியில் 8000 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர். இது நாட்டின் இரண்டாவது பெரிய பல-இனப் பாடசாலையாகும். பாடசாலை அமைந்துள்ள கிரெகரி வீதியின் பெயர் 2013 இல் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை என மாற்றப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Shanika Perera (August 1, 2010). "D.S. Senanayake College, Colombo - A leader in every way". Sunday Times. http://sundaytimes.lk/100801/Education/ed09.html.
- ↑ "D.S.Senanayake College OBA - dsscoba.com". D S Senanayake CollegeOld Boys' Association.[[[|முதன்மையற்ற ஆதாரம் தேவை]]]
- ↑ "President renames Gregory's Road as R. G. Senanayake Mawatha". Daily News. 16 July 2013. http://www.dailynews.lk/?q=2013/07/16/local/president-renames-gregorys-road-rgsenanayake-mawatha.