டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி
டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி (Thiruvidaimarudur Sambamurti Balakrishna Sastrigal) (1919–2003) தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் ஹரிகதா கலாட்சேபம் செய்வதில் புகழ்பெற்றவர்.[1]
இளமை வாழ்க்கைதொகு
வேத விற்பன்னரான சாம்பமூர்த்திக்கு , தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் 1919-இல் பிறந்தவர் பாலகிருஷ்ண சாஸ்திரி. சிறு வயதில் நாகலெட்சுமியை திருமணம் செய்து கொண்ட பாலகிருஷ்ண சாஸ்திரி, தமது மாமனாரிடம் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் கர்நாடக சங்கீதத்தையும் முறைப்படி கற்றவர். பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த பாலகிருஷ்ண சாஸ்திரி, ஆங்கில இலக்கியத்தில் புலமைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்த பாலகிருஷ்ண சாஸ்திரி, பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். பணி ஓய்வுக்குப் பின் முழுநேரமாக ஹரிகதா காலச்சேபங்கள் நாடு முழுவதும் செய்தார்.
குடும்பம்தொகு
பாலகிருஷ்ண சாஸ்திரி - நாகலெட்சுமி இணையரின் மூத்த மகன் மௌலி, தமிழ் திரைப்பட இயக்குநர், மேடை நாடகம் மற்றும் திரைக் கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இளைய மகன் எஸ். பி. காந்தன், மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.
விருதுகள்தொகு
- கலைமாமணி விருது, 1972, தமிழ்நாடு அரசு
- சங்கீத கலாசிகாமணி விருது, 1988, இந்திய நுண்கலைகள் சங்கம், சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1993
- சங்கீத கலா ஆச்சாரியர் விருது, 1997, மியூசிக் அகாதெமி
மறைவுதொகு
- பாலகிருஷ்ண சாஸ்திரி தமது 84-வது அகவையில் 11 சூன் 2003 அன்று வயது முதிர்வால் காலமானார்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ frills’ was hallmark of T.S. Balakrishna Sastrigal
- ↑ Harikatha artiste Balakrishna Sastrigal passes away
- Profiles of Artistes, Composers, Musicologists at saigan.com
- DVV (20 June 2003). "Versatile exponent of Harikatha". தி இந்து. Archived from the original on 26 ஆகஸ்ட் 2010. https://web.archive.org/web/20100826115447/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/06/20/stories/2003062001600400.htm.
- Harikatha artiste Balakrishna Sastrigal passes away at kutcheribuzz.com