ஹரிகதா கலாட்சேபம்
ஹரிகதா காலட்சேபம் (Harikatha), திருமாலின் அவதாரக் கதைகளை கூறும் ஹரிகதை என்பது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கலந்த கலவையாகும். மக்களிடையே பக்தி மார்க்கத்தை பரப்புவதில் ஹரிகதா காலட்சேபம் முன்னிலை வகித்தது.
ஹரிகதைக்கும், உபன்யாசம் அல்லது ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கும் வேறுபாடு உண்டு. உபன்யாசம் செய்பவர் உரைநடையில் பேசுவதில் மட்டும் வல்லுனராக இருந்தால் போதும். ஆனால் ஹரிகதா காலட்சேபம் செய்பவரோ உரையாற்றுவதிலும், பாடுவதிலும், பாவனைகளை வெளிப்படுத்தி நடிப்பதிலும், சமயத்தில் நடன முத்திரைகளை அபிநயிப்பதிலும்கூட வல்லுனராக இருக்கவேண்டும். மேலும் வடமொழி, தெலுங்கு போன்ற பன்மொழியில் வித்தகராக இருத்தல் மிகச்சிறப்பு. வேதங்கள், சுலோகங்கள், கீர்த்தனைகள், ராக ஆலாபனைகள், தமிழ், தெலுங்கு பாடல்கள், மராத்திய அபங்கங்கள், இந்தி பஜன்கள் என்று அனைத்தையும் அறிந்தவராக இருப்பதோடு, அவற்றை அளவோடு பயன்படுத்துவதில் திறமையானவராக இருத்தல் வேண்டும். குறிப்பாக இதிகாசங்கள் மற்றும் புராணக் கதைகளை மக்களிடையே சுவையுடன் எடுத்துக் கூறவேண்டும். பக்கவாத்தியங்களுடன் ஹரி கதை வித்தகர் உணர்ச்சிபூர்வமாக நவரசங்களையும் வெளிப்படுத்தும் போது நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.
பெரும்பாலும் ஹரிகதைக்கு பக்கவாத்தியங்களாக மிருதங்கமும், ஹார்மோனியமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னாளில் ஆர்மோனியத்தின் பதிலாக வயலினும், சுருதி பெட்டியும் ஆக்கிரமித்துவிட்டது.
இந்து தொன்மவியலில்
தொகு- முதன்முதலில் ஹரிகதையை நாரதரே இசைத்துப் பாடி மூவுலகங்களில் பரப்பியவர் என இந்து தொன்மவியல் மூலம் அறியப்படுகிறது.
- வால்மீகியின் இராமாயணக் காவியத்தில், இரட்டையர்களான லவன் மற்றும் குசன், இராமகதையை, இராமனின் அயோத்தி அரசவையில் இசைத்துப் பாடினர் என அறியப்படுகிறது.[1]
வரலாறு
தொகுகிபி 15-ஆம் நூற்றாண்டுகளில், தக்காணத்தின் தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில், புரந்தரதாசர், ஜெயதேவர், கனகதாசர், துக்காராம் போன்ற வைணவ அடியார்களால் ஹரிகதை இசைத்துப் பாடி பரப்பப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் (1674–1855) தமிழகத்தை ஆண்டபொழுது, ஹரிகதா காலட்சேபங்கள் "பஜனை சம்பிரதாயத்தோடு" தமிழ்நாட்டிற்கு அறிமுகமாயின.
தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மாவட்டங்களில் 19-ஆம் நூற்றாண்டுகளில் தெலுங்கு மொழியில் ஹரிகதை பரவியது.[2]
ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ்பெற்றவர்கள்
தொகு- இலக்குமனாச்சாரி
- திருப்பழனம் பஞ்சாபகேச பாகவதர்
- மாங்குடி சிதம்பர பாகவதர்
- பிச்சாண்டார்கோவில் முத்தையா பாகவதர்
- திருவையாறு அண்ணாச்சாமி பாகவதவர்
- எம்பார் சிறீரங்காச்சாரியார்
- கோனூர் சீதாராம சாஸ்திரி
- சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர்
- டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி[3]
- கிருபானந்த வாரியார்
- எம்பார் விஜயராகவாச்சாரியார்
- சந்தான கோபாலாச்சாரியார்
- சரஸ்வதிபாய்[4]
- பத்மாசினிபாய்
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Singh, p. 2118
- ↑ Thoomati Donappa. Telugu Harikatha Sarvasvam. இணையக் கணினி நூலக மைய எண் 13505520.
- ↑ T. S. Balakrishna Sastrigal
- ↑ Deepa Ganesh (February 12, 2015). "She paved the way". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/she-paved-the-way/article6887087.ece. "Sriram V. records F.G. Natesa Iyer (in 1939) as saying: “Saraswati Bai is a pioneer, and today, as a result of her sacrifices…. Brahmins and non-Brahmins walk freely over the once forbidden ground. C. Saraswati Bai has achieved this miracle.”"
மேற்கோள்கள்
தொகு- Singh, N.K. (1997). Encyclopaedia of Hinduism, Volume 3. Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-168-9.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Arnold, Alison (2000). "Kassebaum, Gayathri Rajapur.'Karnatak raga'". The Garland Encyclopedia of World Music: South Asia : the Indian subcontinent. New York & இலண்டன்: Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8240-4946-2.
- Harikatha: its origins and development, by Kalaimamani B. M. Sundaram. Publisher Vidwan R.K. Srikantan Trust, 2001.
- Datta, Amaresh (2006). The Encyclopaedia Of Indian Literature (Devraj To Jyoti), Volume 2. சாகித்திய அகாதமி. pp. 1551–1553. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1194-7.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Harikatha : Samarth Ramdas' Contribution to the Art of Spiritual Story-Telling by Meera Grimes. Indica Books, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86569-76-6.
வெளி இணைப்புகள்
தொகு- Article on Harikatha
- Art of rendering Harikatha பரணிடப்பட்டது 2004-12-31 at the வந்தவழி இயந்திரம் at தி இந்து