இலவன்
இலவன் (ஆங்கில மொழி: Lava or Luv - (சமக்கிருதம்: लव இராமர் மற்றும் சீதைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் ஆவார் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பினார். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அங்கு சீதைக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். [1]
இராமர் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், குசனும் அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர்.
-
லவ குசர்களுடன் இலக்குவன் போரிடுதல்
-
லவ குசர்களுடன் இராமர் போரிடுதல்
-
லாகூர் கோட்டையில் லவன் பெயரில் உள்ள கோயில்
இராமனுக்கு பிந்தைய வரலாறு
தொகுஇராமருக்குப் பின் லவனும் குசனும் அயோத்தி நாட்டை ஆண்டனர். லவன், தன்பெயரில் லவபுரி (தற்போதைய லாகூர்) நகரத்தை கட்டினான். குசனும் தன் பெயரில் கசூர் எனும் நகரத்தை நிர்மாணித்தான். .[2] [3] லாகூர் சாகிக் கோட்டையில் லவன் பெயரில் ஒரு கோயில் உள்ளது[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ [http://www.indianscriptures.com/travel/historical/valmiki-ashram-bithoor Valmiki-Ashram]
- ↑ Nadiem, Ihsan N (2005). Punjab: land, history, people. Al-Faisal Nashran. p. 111. பார்க்கப்பட்ட நாள் 2009-05-29.
- ↑ Vishvanath Limaye (1984). Historic Rama of Valmiki. Gyan Ganga Prakashan.
- ↑ Ahmed, Shoaib. "Lahore Fort dungeons to re-open after more than a century." Daily Times. November 3, 2004.