குசன் ராமர் - சீதை தம்பதியரின் இரட்டை குழந்தைகளில் ஒருவர். கர்ப்பவதியாக இருந்த நிலையில் இராமரால் வெளியேற்றப்பட்ட சீதை, வால்மீகி முனிவரின் ஆச்சிரமத்தில் குசனையும், லவனையும் பெற்றெடுத்தாள்.[1]

வால்மீகி முனிவருடன் லவன் மற்றும் குசன்

இந்த இரட்டைக் குழந்தைகள், சிறுவர்களாக வளர்ந்த பிறகு, வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர். வால்மீகி இயற்றிய இராமாயணத்தை இராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர். அதன் பிறகுதான் இராமர், சீதையை மீண்டும் அயோத்திக்கு வரவழைத்தார். அதைத் தொடர்ந்து, சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள்.

மேற்கோள்கள்தொகு

  1. [http://www.indianscriptures.com/travel/historical/valmiki-ashram-bithoor Valmiki-Ashram]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசன்&oldid=3055022" இருந்து மீள்விக்கப்பட்டது