டி. கே. பாலச்சந்திரன்
டி. கே. பாலச்சந்திரன் என்பவர் ஒரு இந்திய நடிகர். அவர் முக்கியமாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றினார். 200க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டி. கே. பாலச்சந்திரன் | |
---|---|
பிறப்பு | 2 பெப்ரவரி 1928 |
இறப்பு | 15 திசம்பர் 2005 | (அகவை 77)
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1950–1995 |
பெற்றோர் | வஞ்சியூர் பி. கே. குஞ்சன் பிள்ளை - பருக்குட்டியம்மா |
வாழ்க்கைத் துணை | விசாலாட்சி |
பிள்ளைகள் | வசந்த் , வினோத் |
உறவினர்கள் | வஞ்சியூர் மாதவன் நாயர் (சகோதரர்) |
திரைத்துறையில் தயாரிப்பு, உரையாடல், கதை, திரைக்கதை என பலதுறைகளில் பங்களிப்பு செய்துள்ளார். பாலச்சந்தருக்கு மலையாள திரைப்பட வரலாற்றில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர் என்ற பெருமையுள்ளது.
குடும்பம்
தொகுபாலச்சந்திரன் குஞ்சன் பிள்ளைக்கும் பருக்குட்டியம்மாவுக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
பாலச்சந்திரன், விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வசந்த், வினோத் என்ற இரு மகன்கள் இருந்தனர். நடிகர் வஞ்சியூர் மாதவன் நாயர் இவரது மூத்த சகோதரர்.[1]
திரைத்துறை
தொகுபாலச்சந்திரன் 1940 இல் "பிரஹலாதா" திரைப்படத்தில் நடித்தார். அப்போது இவருக்கு பதிமூன்றே வயதாகும். 1968 ஆம் ஆண்டில், மலையாள திரைத்துறையின் முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படமான விருதன் ஷங்குவில் நடித்தார்.
தமிழ்
தொகு- ஜாதகம் (1953)
- அந்த நாள் (1954)
- நாடோடி மன்னன் (1958)
- பாண்டி தேவன் (1958)
- தெய்வத்தின் தெய்வம் (1962)
- குலவிளக்கு (1969)
- நீதி (1972)