டி. வி. சாம்பசிவம் பிள்ளை

டி. வி. சாம்பசிவம் பிள்ளை தமிழின் முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர்.[1] டி. வி. என்ற ஆங்கில முதலெழுத்துக்கள் தஞ்சாவூர் வில்வையா மன்னையார் என்ற அவரது தந்தை பெயரைக் குறிக்கின்றன. சாம்பசிவத்தின் மருத்துவப் பின்னணி குறித்து முழுதும் தெரிந்திலது. இவர் காவல்துறையில் எழுத்தராய்ப் பணி தொடங்கி காவல்துறை ஓய்வாளராய்ப் பணி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science என்ற அகராதி இவர் இறப்புக்குப் பின்னர் 4000 பக்கங்கள் உடைய தொகுதியாய் வெளியானது. இதில் 80,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன.[2] 1953-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தனது 73-வது வயதில் சாம்பசிவம் பிள்ளை மறைந்தார்.[3]

டி. வி. சாம்பசிவம் பிள்ளை
பிறப்பு19 செப்டம்பர் 1880
பெங்களூர்
இறப்பு12 நவம்பர் 1953 (73 வது வயதில்)

தொடக்க கால வாழ்க்கை:

சாம்பசிவம் பிள்ளை அவர்கள், பெங்களூரில் 1880-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார்.[3] இவர் வில்வையா மன்னையார் - மனோண்மணி அம்மாள் அவர்களின் மூத்த புதல்வர் ஆவார். தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டவர். பிளேக் தொற்றுநோயின் காரணமாக, அவரின் குடும்பத்தினர் பிற்பாடு, பெங்களூரில் உள்ள தங்கள் பூர்வீகக் கிராமத்திற்கே குடியேறினர். சாம்பசிவம் பிள்ளை அவர்கள் பெங்களூரில் தனது படிப்பை முடித்துவிட்டு, மதராஸ் காவல் நிலையத்தில், எழுத்தராகப் பணியேற்றார். 1903 ல், துரைக் கண்ணு அம்மாள் என்பவரை மணமுடித்துக் கொண்டார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் அனைவரும் எதிர்பாராத இயற்கை எய்தினர். 1014 ஆம் ஆண்டு துரைக்கண்ணு அம்மாளும் காலராவின் காரணமாக இயற்கை எய்தினார். பின்னர், அம்மணி அம்மாள் என்பவரை 1916 ஆம் ஆண்டு மணம் முடித்துக்கொண்டார். ஆனால், அவரும் மகப்பேற்றின் போது எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். இத்தகைய உளச்சோர்வுக்கு ஆளான சாம்பசிவம் பிள்ளை அவர்கள், அதிலிருந்து விடுபட, தன்னை முழுவதுமாக சித்த மருத்துவத்திற்காக அர்ப்பணித்தார். ஆங்கிலத்தில், சித்த மருத்துவம் சார்ந்த படைப்புகளின் தட்டுப்பாட்டை உணர்ந்தவர், மருத்துவத்திற்கான, தமிழ் - ஆங்கில அகராதியை உருவாக்கினார். இது இன்றளவும், சித்த மருத்துவத்தின் ஒரு இன்றியமையாதப் படைப்பாகக் கருதப்படுகிறது. இவர், 1953 நவம்பர் 12 -ல் இயற்கை எய்தினார்.[4]

அங்கீகாரம்:

தமிழக அரசு, 1949 -ம் ஆண்டு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கி, இவரது ஆராய்ச்சிக்கு உதவியது. மதராஸ் பல்கலைக் கழகமும், மைசூர் பல்கலைக்கழகமும் இவரின் பணியை பாராட்டும் விதமாக, ரூபாய் 5000 தொகையை வழங்கி கௌரவித்தது. 2019 ஆகஸ்ட் 30 ஆம் தேதி, இந்திய அரசு இவரை கௌரவிக்கும் வகையில், பன்னிரண்டு இந்திய மருத்துவ மேதைகளின் வரிசையில் இவருக்கும் 5 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலையை வெளியிட்டது. தற்போது CCRS அமைப்பில் இருந்து SEARCHi என்னும் செயலி, இவரது அகராதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பணி:

திரு. சாம்பசிவம் பிள்ளை அவர்கள், தமது 16 ஆண்டுகால உழைப்பை, சித்த மருத்துவ அகராதியினை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். இதற்காக தமது வருவாய், நிலபுலன்கள் மற்றும் பிற சொத்துக்களை, அவர் செலவழித்துள்ளார். 1938 -ம் ஆண்டு தமது சொந்த செலவு மற்றும் முயற்சியில், அகராதியின் இரண்டு பாகங்களை வெளியிட்டார். மூன்றாம் பாகத்தை பதிப்பித்து வெளியிட தமிழக அரசும் பகுதியளவு உதவியது.[5] நான்கு மற்றும் ஐந்தாம் பாகங்கள் 1977 மற்றும் 1978 -ம் ஆண்டுகளில், ஜி. டி. நாயுடு மற்றும் அவரது மகன் ஜி. டி. என். கோபால் அவர்களால் முறையே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த படைப்பில், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தாவர, சங்கம, தாது, உலோகப் பொருட்களைப் பற்றிய உயர்ந்தக் குறிப்புகள் அடங்கியுள்ளன. இப்படைப்பு 5 பாகங்களையும், 6537 பக்கங்களையும் 80,000 வார்த்தைகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் வார்த்தைக்கு ஈடான, ஆங்கில/ இலத்தின் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுகுறிப்புகளும் தேவைப்படும் இடங்களில், விளக்கவுரைகளும் இடம்பெற்றுள்ளன.

1968 -ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், The greatness of siddha medicine என, இப்படைப்பு மறுபெயரிடப்பட்டு, வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் 01 May 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ஆ. இரா. வேங்கடாசலாபதி (ஜனவரி 2007). "மருத்துவ அகராதி தந்த மேதை ஒரு துன்பியல் நாடகம்". காலச்சுவடு (85). 
  3. 3.0 3.1 "சித்த மருத்துவத்துக்கு பெரும் பங்காற்றிய மறைந்த டி.வி.சாம்பசிவம் பிள்ளை படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை : பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  4. Omprakash, Karuppiah; Rathinamala, Rathinam; Chandran, Subash (2014). "BIOGRAPHY OF T.V.SAMBASIVAM PILLAI AND AN ANALYSIS OF HIS CONTRIBUTION TO THE SIDDHA SYSTEM OF MEDICINE" (in en). International Journal of Ayurveda and Pharma Research. பன்னாட்டுத் தர தொடர் எண்:2322-0910. https://ijapr.in/index.php/ijapr/article/view/259. 
  5. Nanthine, K; Murugesan, S; Madhavan, R (2017-11-30). "Evaluation of In vitro Free Radical Scavenging potential of the Novel siddha formulation Idivallathi Mezhugu using DPPH, NO and ABTS radical scavenging assay". International Journal of Advanced Research in Biological Sciences (IJARBS) 4 (11): 42–48. doi:10.22192/ijarbs.2017.04.11.006. http://dx.doi.org/10.22192/ijarbs.2017.04.11.006. 

4.https://www.vikatan.com/health/healthy/the-stamp-of-the-best-author-of-siddha-medicine-to-be-released-by-narendra-modi

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._சாம்பசிவம்_பிள்ளை&oldid=3930531" இலிருந்து மீள்விக்கப்பட்டது