டி. வி. சுப்பு

டி. வி. சுப்பு (பிறப்பு: ஏப்ரல் 2, 1979) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் “சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள்”, “சாதனை நாயகன் சச்சின்”, “அறிவோம் ஆன்மிகம்” போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “சாதனை படைத்த நட்சத்திர வீரர்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._சுப்பு&oldid=3614067" இலிருந்து மீள்விக்கப்பட்டது