டி. வி. வெங்கட்ராமன்

இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்

டி. வி. வெங்கட்ராமன் (T. V. Venkataraman) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1958-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3][4][5]

டி. வி. வெங்கட்ராமன்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
25 சூன் 1991 – 31 மே 1994
முன்னையவர்எம். எம். ராஜேந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-11-23)23 நவம்பர் 1935
தஞ்சாவூர், தமிழ்நாடு இந்தியா
இறப்பு21 ஏப்ரல் 2018(2018-04-21) (அகவை 82)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

அரசுப் பணிகள்

தொகு

1958 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எம்.எம்.ராஜேந்திரனின் பணி இடமாற்றத்திற்கு பின்னர், தமிழகத்தின் 18-வது தலைமைச் செயலாளராக 1991-ஆம் ஆண்டு ஜூன் 25-இல் பொறுப்பேற்றார். 1993-ஆம் ஆண்டு நவம்பர் 30-இல் பணி ஓய்வு பெற்றாலும், ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டு 1994-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மறைவு

தொகு

தனது 83 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 ஏப்ரல் 2018 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் காலமானார். தினமணி நாளிதழ். 21 ஏப்ரல் 2018. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. முன்னாள் தலைமை செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் காலமானார். தி இந்து தமிழ் நாளிதழ். 21 ஏப்ரல் 2018. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. Former Chief Secretary T.V. Venkataraman no more. The Hindu. 21 April 2018.
  4. Tamil Nadu: Former Chief Secretary T V Venkataraman during Jaya’s first CM tenure, no more. New Indian Express. 21 April 2018.
  5. Former Tamil Nadu chief secretary passes away. Times of India. 21 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._வெங்கட்ராமன்&oldid=3855512" இலிருந்து மீள்விக்கப்பட்டது