டீம் வியூவர்

டீம் வியூவர் (TeamViewer) என்பது கணிப்பொறி மென்பொருளாகும். இது ஒரு கணினியையோ கைப்பேசியையோ இணையத்தின் மூலம் தொலைவிலுள்ள மற்றொன்றுடன் இணைத்து, அதைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் தரவுகளைப் பறிமாறிக் கொள்ளவும் உதவுகிறது. மேலும், இணையவழிக் கூட்டங்கள் நடத்தவும், இணையவழிக் கலந்துரையாடலுக்கும் பயனாகிறது. இம்மென்பொருள் 2005 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. இம்மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), ஓஎஸ் எக்ஸ் (OS X)[1][2] லினக்ஸ் (Linux)[3], ஐஓஎஸ் (iOS)[4] ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட கணினிகளிலும் இயங்கும். விண்டோஸ் ஆர்டி (Windows RT)[5], விண்டோஸ் கைப்பேசியிலும் (Windows Phone)[6] ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை (Android)[7] அடிப்படையாகக் கொண்ட கைப்பேசியிலும் இயங்கும். வணிக ரீதியான பயன்பாட்டை தவிர்த்து, தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கிறது. வணிக நிறுவனுங்களுக்கென தனியாக கட்டணம் செலுத்திப் பெறும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.[8]

டீம் வியூவர்
உருவாக்குனர்டீம் வியூவர்
அண்மை வெளியீடு/ சூன் 1 2011 (2011-06-01); 4658 தினங்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு இயங்குதளம், லினக்ஸ், ஐஓஎஸ், லினக்ஸ், ஓஎஸ் எக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ், விண்டோஸ் கைப்பேசி, விண்டோஸ் ஆர்டி
கிடைக்கும் மொழிபன்மொழி
மென்பொருள் வகைமைமென்பொருள்
உரிமம்நிறுவனங்களுக்கு கட்டண சேவை பிறருக்கு இலவசம்.
இணையத்தளம்TeamViewer

மேற்கோள்கள் தொகு

  1. TeamViewer V4desktop collaboration app now Mac-compatible Philip Michaels, Macworld
  2. Article comparing screen-sharing software பரணிடப்பட்டது 2012-10-07 at the வந்தவழி இயந்திரம், Seth Rosenblatt, Cnet download blog
  3. "TeamViewer 5 for Linux released". Support.teamviewer.com. 2010-04-15. Archived from the original on 2010-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-11-24.
  4. TeamViewer iPad App Provides Remote Access to PCs David Roe, CMSWire
  5. "TeamViewer Touch App for Windows 8 released". Teamviewer. 2012-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
  6. "TeamViewer® Launches New App for Windows Phone 8". TeamViewer. 2013-06-11. பார்க்கப்பட்ட நாள் 2013-06-11.
  7. "App (Beta) for Android released". TeamViewer. 2010-11-24. Archived from the original on 2010-12-10. பார்க்கப்பட்ட நாள் 2010-11-25.
  8. TeamViewer Web site, Remote Support page
"https://ta.wikipedia.org/w/index.php?title=டீம்_வியூவர்&oldid=3556692" இலிருந்து மீள்விக்கப்பட்டது