டூலெட்
டூலெட் (To let) 2018-இல் இந்தியத் தமிழ்-மொழியில் வெளிவந்த குறும்படமாகும்.. இதை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்தவர் செழியன். இவரது மனைவி பிரேமா இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா, தருண் ஆகியோர் நடித்திருந்தனர். இது 65வது தேசிய திரைப்படவிழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும், கோவாவில் நடைபெற்ற 49வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பரிந்துரை விருதினையும் பெற்றது.
டூலெட் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | செழியன் |
தயாரிப்பு | பிரேமா செழியன் |
கதை | செழியன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | செழியன் |
படத்தொகுப்பு | ஏ. ஆர். பிரசாத் |
ஓட்டம் | 99 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை சுருக்கம்
தொகுஇளங்கோ திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக வேலை பார்க்கிறான். அவன் தனது மனைவி அமுதா மற்றும் 5 வயது நிரம்பிய தனது மகன் சித்தார்த்துடன் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறான். அந்த வீட்டின் உரிமையாளர் தகவல் தொழில்நுட்பம் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் அதிகமாக பணம் கிடைக்கும் என்று எண்ணுகிறார். அதனால்,இளங்கோ குடும்பத்தினரை 30 நாட்கள் கெடு வைத்து வீட்டைக் காலி செய்யும்படி கூறுகிறார். வாடகை வீட்டிலிருந்த குடும்பத்தை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறுவதால் ஏற்படும் சிக்கல்களை சித்தரிக்கிறது.[1]
நடிகர்கள்
தொகுதயாரிப்பு
தொகுடூலெட் திரைப்படம், செழியன்-பிரேமா தம்பதியினரின் பட நிறுவனம் மூலம் வெளிவந்தது. இப்படத்தின் மூலம் செழியன் இயக்குநராக அறிமுகமானார்.[1][3] செழியன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ளார்[1] யதார்த்தமான திரைப்படக் காட்சிகளை உணர்த்தும் போது, பாடல்கள் மற்றும் வேறு இசைக்கு இடமில்லாததால் பாடல் காட்சிகளைத் தவிர்த்ததாக கூறியுள்ளார். இத்திரைப்படத்தில், வானொலி, தொலைக்காட்சியின் சத்தம், மக்கள் பேசிக்கொள்வது, சாலையில் செல்லும் வண்டிகள் ஏற்படுத்தும் ஓசை இவையனைத்துமே படத்தின் இசைத் தேவையை பூர்த்தி செய்துவிட்டதாக குறிப்பிடுகிறார். புதுமுக நடிகர்களைக் கொண்டு இப்படம் 25 நாட்களில் முடிக்கப்பட்டது..[2]
வெளியீடும் வரவேற்பும்
தொகு2017, 2018 இல் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் இது திரையிடப்பட்டது.[1] 2017இல் கல்கத்தா பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இத்திரைப்படம் 21 பெப்பிரவரி 2019 இல் திரைக்கு வந்தது.[4]
விமர்சனங்கள்
தொகுஆஸ்கார் விருது பெறா ஈரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாடி, இது முழுமையான திரைப்படம் எனகூறினார். இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை மிகவும் புத்திசாலித்தனமான, அழகிய திரைப்படம் என பாராட்டினார். இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரசன்ன வித்தனகே உண்மையான அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு உண்மையான திரைப்படம் என்று இப்படத்தையும் பாராட்டினார்.[[5][6]
விருதுகள்
தொகுஇப்படம் 65 ஆவது தேசிய பட விழாவில் சிறப்பம்சமான தமிழ்ப்படம் என்ற பிரிவில் விருதைப் பெற்றது.[7] 2017 கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருதைப் பெற்றது. திரைக்கு வரும் முன்னரே 26 பன்னாட்டு விருதுகளை வென்றும், விருதுக்காக 80 தடவைகள் முன்மொழியப்பட்டும் உள்ளது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Ramachandran, Mythily (18 April 2018). "Tamil film 'To Let' wins accolades". Gulf News. http://gulfnews.com/life-style/celebrity/desi-news/south-india/tamil-film-to-let-wins-accolades-1.2207305.
- ↑ 2.0 2.1 Kolappan, B. (20 November 2017). "Film that portrays the ordeal of house-hunting bags award". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/film-that-portrays-the-ordeal-of-house-hunting-bags-award/article20557321.ece.
- ↑ Jeshi, K. (16 April 2018). "Filmmaking is simple, says director Chezhiyan" (in en-IN). தி இந்து. http://www.thehindu.com/entertainment/movies/interview-with-national-award-winner-chezhiyan-director-of-to-let/article23555966.ece. பார்த்த நாள்: 22 April 2018.
- ↑ "டூலெட்". மாலை மலர். 20 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ http://Hala%20El%20Mawy
- ↑ Hala El Mawy],film critic, Egypt.Ordinary story and lifting into extraordinary cinematic heights-Italo Spinelli ,filmmaker,Playwright.Very honest movie-Mostofa Sarwar Farooki ,Bangladesh filmmaker.A small drama intimate and universal told in a fresh and modern language-http://Spazio%20Gloria Spazio Gloria, Italy and so many critiques praised its simple and modern approach in storytelling.
- ↑ "65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு". தமிழ் இந்து திசை. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article23522560.ece. பார்த்த நாள்: 16 January 2019.
- ↑ "26 சர்வதேச விருதுகளை வென்ற டூலெட் திரைப்படம்". மாலைமலர். https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/28105521/1215235/TOLET-tamil-film-won-26-International-awards.vpf. பார்த்த நாள்: 16 January 2019.