டெட்ராசிடோமெத்தேன்

டெட்ராசிடோமெத்தேன் (Tetraazidomethane) என்பது CN12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். டெட்ராசிடோமீத்தேன், நான்கசிடோமீத்தேன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். நிறமற்றதாக உள்ள இச்சேர்மம் வெடிக்குந் தன்மை மிகுந்த நீர்மமாகும். ஒரு கார்பன் அணுவுடன் நான்கு அசைடு வேதி வினைக்குழுக்கள் பதிலீடு செய்யப்பட்ட கட்டமைப்பை இச்சேர்மம் பெற்றுள்ளது.

டெட்ராசிடோமெத்தேன்
Tetraazidomethane
Tetraazidomethane
Tetraazidomethane
டெட்ராசிடோமெத்தேன்
டெட்ராசிடோமெத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராசிடோமெத்தேன்
இனங்காட்டிகள்
869384-16-7 N
ChemSpider 17219283 Y
InChI
  • InChI=1S/CN12/c2-10-6-1(7-11-3,8-12-4)9-13-5 Y
    Key: PGNZIEKVQCKOBT-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CN12/c2-10-6-1(7-11-3,8-12-4)9-13-5
    Key: PGNZIEKVQCKOBT-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16059578
  • [N-]=[N+]=N\C(\N=[N+]=[N-])(\N=[N+]=[N-])\N=[N+]=[N-]
பண்புகள்
CN12
வாய்ப்பாட்டு எடை 180.09 கிராம்/மோல்
கொதிநிலை ~165 °செல்சியசு ('மதிப்பீடு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

2006 ஆம் ஆண்டு கிளாசு பானெர்ட்டு என்பவர் டிரைகுளோரோ அசிட்டோநைட்ரைலுடன் சோடியம் அசைடை வினைபுரியச் செய்து முதன் முதலில் இதைத் தயாரித்தார்[1]  .

பயன்கள்

தொகு

பிற பாலி அசைடுகளுடன் டெட்ராசிடோமெத்தேனும் வெடிபொருட்கள், உந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் உயர்-ஆற்றல்-அடர்த்தி பொருளாக பயன்படுகிறது[2]. சிலிக்கன் டெட்ராசைடு என்ற சேர்மமும் அறியப்படுகிறது.

வினைகள்

தொகு

நீராற்பகுத்தல், ஆல்க்கீன்கள், ஆல்க்கைன்களுடன் வளையக் கூட்டுவினைகள், பாசுபீனுடன் வினைபுரிந்து பாசுபாசின்கள் உருவாதல் போன்ற பல ஆச்சர்யமூட்டும் வினைகளில் டெட்ராசிடோமெத்தேன் பங்கு கொள்வதாக பானெர்ட்டு அறிவித்தார்[1]

 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Exciting Chemistry of Tetraazidomethane", Klaus Banert, Young-Hyuk Joo, Tobias Ruffer, Bernhard Walfort, and Heinrich Lang, Angew. Chem. Int. Ed. 2007, 46, 1168–1171. எஆசு:10.1002/anie.200603960
  2. "Tetraazidomethane: Chemistry with a Bang", Chemical & Engineering News, Dec. 18, 2006, 46.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராசிடோமெத்தேன்&oldid=2960145" இலிருந்து மீள்விக்கப்பட்டது