டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு

டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு (Tetranitratoaluminate) என்பது [Al(NO3)4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அலுமினியம் மற்றும் நைட்ரேட்டு தொகுதிகளின் எதிர்மின் அயனியாகும். இந்த அயனி உருவாக்கும் உப்புகள் டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டுகள் எனப்படுகின்றன [1]. இலேசான தனிமத்தின் நைட்ரேட்டு அணைவுச் சேர்மமாக இருப்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றாகும்.

தொடர்புடைய வேதிப்பொருட்கள்

தொகு

அலுமினியம் டெட்ராநைட்ரேட்டோபோரேட்டில் போரானை பதிலீடு செய்யும்போது அலுமினியம் மேலும் அதிகமான நைட்ரேட்டுகளை ஒருங்கிணைக்கிறது. இதன் விளைவாக பென்டா நைட்ரேட்டோஅலுமினேட்டு, எக்சா நைட்ரேட்டோஅலுமினேட்டு அயனிகள் உருவாகின்றன.

நைட்ரேட்டுகளுக்குப் பதிலாக பெர்குளோரேட்டுகளைப் பதிலீடு செய்தால் டெட்ராபெர்குளோரேட்டோஅலுமினேட்டு அயனிகள் உருவாகின்றன.

உருவாக்கம்

தொகு

நீரேற்றம் பெற்ற அலுமினியம் நைட்ரேட்டு, டைநைட்ரசன் பென்டாக்சைடுடன் வினைபுரிந்து நைட்ரோனியம் உப்பை [NO2]+[Al(NO3)4]− உருவாக்குகிறது[2]. அலுமினியம் குளோரைடுடன் நேரயனியின் குளோரைடு உப்பைச் சேர்த்து அதனுடன் தூய திரவ டைநைட்ரசன் டெட்ராக்சைடு அல்லது நைட்ரோமெத்தேனில் கரைந்த டைநைட்ரசன் டெட்ராக்சைடு சேர்த்து சூடுபடுத்தி தயாரிக்கப்படுகிறது. திரவ நைட்ரசனின் வெப்பநிலையில் வினை தொடங்கி பின்னர் சூடாக்கப்படுகிறது. அடர் சிவப்பில் நைட்ரோசில் குளோரைடு உடன் விளைபொருளாக உருவாகிறது.கரைப்பானும் உடன்விளைபொருளும் ஆவியாக்கப்படுகின்றன. இதேமுறையில் டெட்ராமெத்திலமோனியம் உப்பையும் உருவாக்க முடியும் [3]

பண்புகள்

தொகு

டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு தொகுதியில் இரண்டு ஈரணு நைட்ரேட்ட்டு தொகுதிகள் உள்ளன. இவை அலுமினியத்தைச் சுற்றி ஒரு சதுரமாக இணைந்துள்ளன. இவற்றுடன் சதுரத்திலிருந்து மேலும் இரண்டு ஒற்றையணு நைட்ரேட்டுகள் ஒர் ஆக்சிசனுடன் மேலும் கீழுமாக செங்குத்தில் இணைந்துள்ளன [4]. டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு உப்புகள் முற்றிலுமாக நிலைப்புத்தன்மையுடன் இருப்பதில்லை. அவை அலும்னியம் ஆக்சி-நைட்ரேட்டுகளாகவும் நைட்ரேட்டுகளாகவும் சிதைவடைகின்றன ref name="Jones2007a"/>. நைட்ரோனியம் டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு பதங்கமாதலின் போது நீரற்ற அலுமினியம் நைட்ரேட்டு உருவாகிறது [2].

நைட்ரோனியம் டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு, நைட்ரிக் அமிலமும் டைநைட்ரசன் பென்டாக்சைடும் கலந்த கலைவியில் கரைந்து எக்சாநைட்ரேட்டோஅலுமினேட்டு அணைவுச் சேர்மம் உருவாகிறது. தண்ணீரில் இது நைட்ரேட்டு குழுக்களை ஆறு தண்ணீர் மூலக்கூறுகளால் இடப்பெயர்ச்சி செய்து எக்சா அக்குவா அணைவாக மாற்ரப்படுகிறது. [5]

உதாரணங்கள்

தொகு

டெட்ராயீத்தைல் அமோனியம் டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டுடன் கூடிய நைட்ரோனியம் டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு முதலில் கண்டறியப்பட்டது [2]. 1-ஈத்தைல்-4,5-டைமெத்தில்-டெட்ரசோனியம் டெட்ராநைட்ரேட்டோஅலுமினேட்டு என்பது ஓர் ஆக்சிசன் சம அயனித் திரவமாகும் [6]. ஈரப்பதம் இல்லாத நிலையில் இந்த திரவ உப்பு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. மெத்தில் நைட்ரேட்டில் இது கரைகிறது. -46° வெப்பநிலையில் இது கண்ணாடியாக இறுகுகிறது. 75° வெப்பநிலையில் மெல்ல சிதைவடைகிறது. 200° வெப்பநிலையில் ஆக்சிசன் இல்லாமலேயும் தீப்பற்றி எரிந்து அலுமினா, நைட்ரசன், தண்ணீர், கார்பனோராக்சைடுகளைத் தருகிறது. ஐதரசீனை விட சிறப்பாகச் செயல்படும் என்பதால் இராக்கெட் எரிபொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [7].

ருபீடியம் சீசியமும் கூட உப்புக்களை உருவாக்குகின்றன ref name="Jones2007c"/>.

டெட்ராமெத்தில் அமோனியம்டெட்ராநைட்ரேட்டோ அலுமினேட்டு a=12.195Å, b=9.639Å c=12.908Å, α=90° β=110.41° γ=90° அளவுகளில் ஒற்றைச்சரிவு படிகங்களாக உருவாகிறது. ஓர் அலகு கூடு வாய்ப்பாடிற்கு 349.14 வாய்ப்பாட்டு எடையும், நான்கு அலகு கூட்டிற்கு 1422Å3 வாய்ப்பாட்டு எடையும் கணக்கிடப்பட்ட அடர்த்தி 1.631கி/செ.மீ3 அளவும் கொண்டுள்ளது [8].

மேற்கோள்கள்

தொகு
  1. Jones, CJ Bigler (2007). Transition and Main Group Metals Applied to Oxidative Functionalization of Methane and Use as High Oxygen Carriers for Rocket Propellants. ProQuest. pp. 139–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780549231066. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 Addison, C. C.; P. M. Boorman; N. Logan (1966). "Anhydrous aluminium nitrate, and the nitronium and alkylammonium tetranitratoaluminates". Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 1434. doi:10.1039/J19660001434. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. 
  3. Jones, CJ Bigler (2007). Transition and Main Group Metals Applied to Oxidative Functionalization of Methane and Use as High Oxygen Carriers for Rocket Propellants. ProQuest. pp. 158–162, 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780549231066. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Jones, CJ Bigler (2007). Transition and Main Group Metals Applied to Oxidative Functionalization of Methane and Use as High Oxygen Carriers for Rocket Propellants. ProQuest. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780549231066. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Logan, Norman (1986). "Chemistry in nitric acid solutions". Pure and Applied Chemistry volume 58 no 8. pp. 1150–1152. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
  6. Jones, CJ Bigler (2007). Transition and Main Group Metals Applied to Oxidative Functionalization of Methane and Use as High Oxygen Carriers for Rocket Propellants. ProQuest. pp. 139–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780549231066. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Jones, C. Bigler; Ralf Haiges; Thorsten Schroer; Karl O. Christe (2006). "Oxygen-Balanced Energetic Ionic Liquid". Angewandte Chemie International Edition 45 (30): 4981–4984. doi:10.1002/anie.200600735. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. 
  8. Jones, CJ Bigler (2007). Transition and Main Group Metals Applied to Oxidative Functionalization of Methane and Use as High Oxygen Carriers for Rocket Propellants. ProQuest. p. 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780549231066. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.[தொடர்பிழந்த இணைப்பு]