டெட்ராபியூட்டைல் வெள்ளீயம்
டெட்ராபியூட்டைல் வெள்ளீயம் (Tetrabutyltin) என்பது C16H36Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை டெட்ராபியூட்டைல் டின், டெட்ரா-என்-பியூட்டைலின், டெட்ரா என்-பியூட்டைல்சிடானேன் என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். நிலைப்புத் தன்மை கொண்ட கரிமவெள்ளீயச் சேர்மமான இது அறை வெப்பநிலையில் நிறமற்ற நீர்மமாகவும் எரியக்கூடியதாகவும் உள்ளது. வலிமையான ஆக்சிசனேற்றிகளுடன் பொருத்தமற்று காணப்படுகிறது. சில சமயங்களில் இதை மிகச் சுருக்கமாக SnBu4 என்றும் டி.டி.பி.டி என்றும் குறிப்பிடுவார்கள். டிரைபியூட்டைலின் மற்றும் டைபியூட்டைலின் போன்ற சேர்மங்கள் தயாரிப்பில் டெட்ராபியூட்டைல் வெள்ளீயம் ஒரு தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபியூட்டைல்டின், tடெட்ராபியூட்டைல்சிடானேன்
| |
வேறு பெயர்கள்
டெட்ரா-'என்-பியூட்டைல்டின்
டெட்ரா-'என்-பியூட்டைல்சிடானேன் டெட்ராபியூட்டைல் வெள்ளீயம் | |
இனங்காட்டிகள் | |
1461-25-2 | |
ChemSpider | 14370 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15098 |
| |
பண்புகள் | |
C16H36Sn | |
வாய்ப்பாட்டு எடை | 347.147 கிராம்/மோல் |
தோற்றம் | நிரமற்ற நீர்மம் |
உருகுநிலை | −97 °C (−143 °F; 176 K) |
கரையாது[2] | |
கரைதிறன் | பென்சீன், ஈதர் அல்லது THF போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரையும்[3] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 107 °C (225 °F; 380 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளீய(IV) குளோரைடுடன் 1-குளோரொபியூட்டேன் சேர்த்து வினைபுரியச் செய்தால் டெட்ராபியூட்டைல் வெள்ளீயம் உருவாகிறது. கிரிக்னார்டு வினை பயன்படும் வெர்ட்சு வினை அல்லது பியூட்டைல் அமோனியம் சேர்மங்கள் இவ்வினையில் பங்கேற்கின்றன. தூய்மையான டெட்ராபியூட்டைல் வெள்ளீயத்துடன் வெள்ளீய(IV) குளோரைடைச் சேர்த்தால் டிரைபியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு மற்றும் டைபியூட்டைல்வெள்ளீயம் குளோரைடு சேர்மங்கள் உருவாகின்றன., பாலிவினைல் குளோரைடுகளில் நிலைப்படுத்திகள், உயிர்க்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் எதிர் சிதிலத்தடுப்பு முகவர்கள் போன்ற கரிமவெள்ளீய சேர்மங்கள் தயாரிப்பில் இந்த வெள்ளீயச் சேர்மங்கள் தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tetrabutyltin MSDS". Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-03.
- ↑ https://www.gelest.com/themencode-pdf-viewer/?file=https://www.gelest.com/wp-content/uploads/13Tin.pdf
- ↑ https://www.gelest.com/themencode-pdf-viewer/?file=https://www.gelest.com/wp-content/uploads/13Tin.pdf
- ↑ Hoch, M. (2001). "Organotin compounds in the environment — an overview". Applied Geochemistry 16 (s 7–8): 719–743. doi:10.1016/S0883-2927(00)00067-6.