டெட்ராபோரிக் அமிலம்
வேதிச் சேர்மம்
டெட்ராபோரிக் அமிலம் (Tetraboric acid) என்பது H2B4O7 என்ற அனுபவ மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பைரோபோரிக் அமிலம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நிறமற்றும் நீரில் கரையக்கூடியதாகவும் திண்மநிலையில் காணப்படுகிறது. போரிக் அமிலத்தை நீர்நீக்கம் செய்தோ அல்லது பலபடியாக்க வினைக்கு உட்படுத்தியோ டெட்ராபோரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டெட்ராபோரிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
12447-38-0 | |
ChemSpider | 450911 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
B4H2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 157.25 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | கி செ.மீ−3 |
உருகுநிலை | 236[1] °C (457 °F; 509 K) |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெட்ராபோரிக் அமிலம் முறையாக டெட்ராபோரேட்டு அயனியின் [B4O7]2− தாய் அமிலமாகும்.
தயாரிப்பு
தொகுஆர்த்தோபோரிக் அமிலத்தை (B(OH)3) சுமார் 170 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்குவதன் மூலம் டெட்ராபோரிக் அமிலத்தை தயாரிக்கலாம்.:[3][4]
- 4 B(OH)3 → H2B4O7 + 5H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ Abdullah Selim Parlakyigit and Celaletdin Ergun (2022): "Facile synthesis method for in situ composites of TiB2/B4C and ZrB2/B4C." Journal of the Australian Ceramic Society, volume 58, pages 411–420. எஆசு:10.1007/s41779-021-00700-3
- ↑ Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.
- ↑ Gurwinder Kaur, Shagun Kainth, Rohit Kumar, Piyush Sharma and O. P. Pandey (2021): "Reaction kinetics during non-isothermal solid-state synthesis of boron trioxide via boric acid dehydration." Reaction Kinetics, Mechanisms and Catalysis, volume 134, pages 347–359. எஆசு:10.1007/s11144-021-02084-8
- ↑ Siavash Aghili, Masoud Panjepour, and Mahmood Meratian (2018): "Kinetic analysis of formation of boron trioxide from thermal decomposition of boric acid under non-isothermal conditions." Journal of Thermal Analysis and Calorimetry, volume 131, pages 2443–2455. எஆசு:10.1007/s10973-017-6740-3