டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு

வேதிச் சேர்மம்

டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு (Tetramethylammonium perchlorate) என்பது [N(CH3)4]+ClO4 என்ற சுருக்கப்பட்ட வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்குளோரேட்டு உப்பாகும்.

டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு
Tetramethylammonium perchlorate
இனங்காட்டிகள்
2537-36-2 Y
ChemSpider 16407
EC number 219-805-5
InChI
  • InChI=1S/C4H12N.ClHO4/c1-5(2,3)4;2-1(3,4)5/h1-4H3;(H,2,3,4,5)/q+1;/p-1
    Key: ZCWKIFAQRXNZCH-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 17337
  • C[N+](C)(C)C.[O-]Cl(=O)(=O)=O
பண்புகள்
(CH3)4NClO4
தோற்றம் வெண் படிகத்தூள்[1]
உருகுநிலை 300 °செல்சியசு
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H272, H300, H311, H315, H319, H335, H370, H373, H411
P210, P220, P221, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

குளிர்ச்சியான நீர்த்த பெர்குளோரிக் அமிலத்துடன் குளிர்ந்த டெட்ராமெத்திலமோனியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வினையின் இறுதியில் வெண்மை நிற வீழ்படிவாக டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு உருவாகிறது.[2]

பயன்கள்

தொகு

வண்ணப்படிவுப் பிரிகையிலும், கரிமத்தொகுப்பு வினைகளில் ஓர் இடைநிலையாகவும், மின்வேதியியலில் ஒரு துணை மின்பகுளியாகவும் டெட்ராமெத்திலமோனியம் பெர்குளோரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[3] பனிப்போரின் போது டிரைமெத்திலாமோனியம் பெர்குளோரேட்டுடன் சேர்த்து இதை கலப்பு உந்துசக்திகளில் ஓர் அங்கமாகப் பயன்படுத்த ஆராயப்பட்டது, ஆனால் இம்முயற்சி அதிக வெற்றி பெறவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. TETRAMETHYLAMMONIUM PERCHLORATE CAS#: 2537-36-2 (chemicalbook.com) . Chemical Book. [2018-3-14]
  2. Juknelevicius, Dominykas; Dufter, Alicia; Rusan, Magdalena; Klapötke, Thomas M.; Ramanavicius, Arunas (2017-02-17). "Study of Pyrotechnic Blue Strobe Compositions Based on Ammonium Perchlorate and Tetramethylammonium Nitrate: Study of Pyrotechnic Blue Strobe Compositions Based on Ammonium Perchlorate and Tetramethylammonium Nitrate". European Journal of Inorganic Chemistry 2017 (7): 1113–1119. doi:10.1002/ejic.201601486. 
  3. "2537-36-2 - Tetramethylammonium perchlorate - 30834 - Alfa Aesar".

மேலும் வாசிக்க

தொகு
  • Hofmann, K. A.; Roth, R.; Hobold, K.; Metzler, A. Relationship between the Constitution and Behavior towards Water of Ammonium Oxonium Perchlorates. Berichte der Deutschen Chemischen Gesellschaft, 1911. 43: 2624-2630.

பன்னாட்டுத் தர தொடர் எண் 0365-9496