டெட்ராமெத்தில்பாசுபோனியம் புரோமைடு

வேதிச் சேர்மம்

டெட்ராமெத்தில்பாசுபோனியம் புரோமைடு (Tetramethylphosphonium bromide) என்பது (CH3)4PBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிமபாசுபரசு சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீரில் கரையக்கூடிய ஒரு திண்மப்பொருளாக இச்சேர்மம் காணப்படுகிறது. புரோமின் எதிர்மின் அயனியும் டெட்ராமெத்தில்பாசுபோனியம் நேர்மின் அயனியும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. மும்மெத்தில் பாசுபீனுடன் மெத்தில் புரோமைடை சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக டெட்ராமெத்தில்பாசுபோனியம் புரோமைடு தயாரிக்கப்படுகிறது.

டெட்ராமெத்தில்பாசுபோனியம் புரோமைடு
இனங்காட்டிகள்
4519-28-2 Y
ChemSpider 317445
InChI
  • InChI=1S/C4H12P.BrH/c1-5(2,3)4;/h1-4H3;1H/q+1;/p-1
    Key: ZTXFOCMYRCGSMU-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 357594
  • C[P+](C)(C)C.[Br-]
UNII UU5JF93X66 Y
பண்புகள்
C4H12BrP
வாய்ப்பாட்டு எடை 171.02 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்

தொகு
 
Cu2[(Me2P(CH2)2]2 இன் கட்டமைப்பு.

புரோட்டான் நீக்க வினையின் மூலமாக மெத்திலீன்மும்மெத்தில்பாசுபீன் லைடைடு உருவாகிறது. இரண்டாவது புரோட்டான் நீக்க வினையில் இச்சேர்மம் தக்கவைக்கப்படுகிறது:[1]

(CH3)4PBr + BuLi → CH3)3P=CH2 + LiBr + BuH
CH3)3P=CH2 + BuLi → CH3)2P(CH2)2Li + BuH

இரண்டாவது புரோட்டான் நீக்கத்தில் கிடைக்கும் விளைபொருள் பல ஒருங்கிணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகத் திகழ்கிறது. எ.கா: டைகுப்ரசு அணைவுச் சேர்மம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்:Cu2[(Me2P(CH2)2]2.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. H. F. Klein (1978). "Trimethylphosphonium Methylide (Trimethyl Methylenephosphorane)". Inorganic Syntheses. Vol. XVIII. pp. 138–140. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132494.ch23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-03393-6.
  2. Schmidbaur, H. (1983). "Phosphorus Ylides in the Coordination Sphere of Transition Metals: An Inventory". Angewandte Chemie International Edition in English 22 (12): 907–927. doi:10.1002/anie.198309071.